|
பயணம்-2
|
"சரி இருக்கட்டும் உங்களுக்கு நல்லகாலம் எண்டா கொண்டுபோவியள்" என சாரதி சொன்னார்.நான் இப்படி இசகு பிசகாக இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ரிவியையே வாங்காமல் வந்திருப்பன். ஆனால் ஒன்றுமட்டும் விளங்கியது: இப்போது இருக்கும் சமாதானமும் நிரந்தரமானதல்ல.
இப்போது பொருட்கள் சோதனைசெய்யும் இடம். ரிவியை செக் பண்ணியபொலிஸ்காரன் மெதுவாக கேட்டான் "ரிமோட்". பின்னர் அவனே பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டு போவென சாடை காட்டினான். உண்மையில் இராணுவத்தினர் செய்கின்ற பிரயோசனமற்ற தடைகளை அவர்களில் சிலர் புரிந்து கொண்டிருப்பது ஓரளவு திருப்தியை கொடுத்தது. வாகன சாரதி திரும்பிவரும்போது சொன்னார் "உவங்களுக்கு எதை தடுக்கவேணும் எதை விடவேணும் எண்டது பிரச்சனை இல்லை. எதையாவது தடுக்கவேணும் எண்டதுதான் பிரச்சனை". ரிவி ரிமோட்டை வைச்சுக்கொண்டுதான் புலிகள் அடிப்பாங்கள் எண்டு இப்பவும் நினைச்சாங்கள் எண்டா இவங்கள் படிக்க இன்னும் நிறைய இருக்கு என சாதாரண பொதுமக்களே யதார்த்தத்தை புரிந்துவைத்திருக்கின்றபோது இராணுவம் அப்படி என்ன முட்டாள்தனமாக இருக்கிறது. நிச்சயமாக அப்படி சொல்லமுடியாது. "உவங்களுக்கு எதை தடுக்கவேணும் எதை விடவேணும் எண்டது பிரச்சனை இல்லை. எதையாவது தடுக்கவேணும் எண்டதுதான் பிரச்சனை". சாரதி சொன்னதில்தான் உண்மை இருப்பதாக பட்டது.
ஓருவாறு சோதனைகளை முடித்துக்கொண்டு இராணுவத்தினரின் சோதனைசாவடியிலிருந்து எல்லைகளை கடக்கின்ற பயணம். இடைப்பட்ட பகுதி பற்றைகளாக இடிந்ந கட்டடங்களாக வெறிச்சோடிய பகுதி. மிதிவெடிகள் பற்றிய எச்சரிக்கைகள். இடைப்பட்ட பகுதி ஒரு கிலோமீற்றர் வரும் இடைவெட்டும் எண்ணங்களோ ஓராயிரம். 20வருட போராட்டம் + 17500 க்கும் மேற்பட்ட போராளிகளின் இழப்பு + 65000 ற்கும் மேற்பட்ட மக்களின் இழப்பு = ??. எல்லா இழப்புக்களுமே அர்த்தமற்றதாகி விட்டதா? இராணுவவேலியால் சூழப்பட்ட வாழ்க்கைதான் முடிவா? விடைகளை தேடியவாறு உள்ளே நுழைய "வணக்கம் அண்ண" யாரோ உடன்பிறந்தவர்கள் கூப்பிட்டது போல உணர்வு.
(இன்னும் வளரும்).
|
|
|
|