<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இளமையில் வெறுமை







துப்பாக்கி போட்ட துவாரங்களுக்குள்ளால்
தூரத்தே ஏதேனும் வெளிச்சம் தெரிகிறதா?
துடிப்பான சிறுவன் இவன்
தொய்ந்துபோய் பார்க்கின்றான்.

கொடுமை கொடுமை இளமையில வறுமை
அதனிலும் கொடுமை இளமையில் வெறுமை.




அன்பின் நண்பா?
அன்பின் நண்பா?

பல நாள் இடைவெளிகளின் பின்தான் உனக்கு கடிதம் எழுத நேரம் கிடைத்தது. நீ நலமாகத்தான் இருப்பாய் என நம்பினாலும் நீ எப்படி சுகமாக இருக்கிறாயா? நாங்கள் எப்படியோ இப்போதைக்கு நலமாகவே இருக்கிறோம்.

மேலும், நாட்டுநிலைமைகள் அவ்வளவு நல்லாயில்லை. அடிக்கடி அமைதித்தூதுவர்கள் வந்துபோனாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். சமஸ்டி என்றும் இடைக்கால நிர்வாகம் என்றும் இழுபட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பென வந்து இருக்கிறது. சந்திரிகா தான் எப்படியும் புலிகளோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டுசெல்வார் என வானோலிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றன. நல்லூர் திருவிழாவில் சந்திரிகா சீப்பு என்றும் சந்திரிகா சாறி என்றும் பொருட்களை விற்ற தமிழர்கள் சந்திரிகாவை எவ்வளவு தூரம் நம்பியிருந்திருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட சந்திரிகாவால்தான் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோம். எல்லாமே ஒருநாடகம் தான் காட்சிகள் தான் இடையிடையே மாறுகின்றன.

மேலும் நேற்று தொழிநுட்ப கண்காட்சி ஒன்றுக்கு போயிருந்தேன். இது கிளிநொச்சியில் வன்னிரெக் தொழிநுட்ப நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. எனக்கு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நாங்கள் நடாத்திய விஞ்ஞான கண்காட்சி ஞாபகங்கள்தான் வந்தன. ஏராளமாக மாணவர்கள் வந்திருந்தார்கள். சைக்கிள் சுற்றி வானொலிச் செய்திகள் கேட்ட மாணவர்கள் , ஜாம் போத்தல் விளக்குக்குக்காவது மண்ணெண்ணை கிடைக்காதா ஏங்கியிருந்த அந்த சிறுவர்கள், கண்காட்சியில் வைத்திருந்த கம்பியுட்டர் தொழிநுட்பங்களை பார்த்து பிரமித்து போனார்கள்.

போரினால் அழிந்துபோனாலும், இந்த மண் மீண்டும் நிமிர்ந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். கிளிநொச்சியை மையப்படுத்தி பல்வேறு கட்டுமானங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெரியளவான வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. உலக வரலாற்றில் போர்கள்தான் நகரங்களின் இடஅமைவை தீர்மானிக்கின்றன. அந்தவகையில் தமிழீழப்போரே வன்னிமையத்தை நிமிரச்செய்துள்ளது. இது எப்போதும் தொடரவேண்டும் என்றே நினைக்கிறேன்.


மேலும் நீ வேறுபல விடயங்களையும் கேட்டிருந்தாய். அதுபற்றியும் எழுதுகிறேன். உங்கு என்ன புதினங்கள் என்பதையும் எழுதவும்.

அன்புடன்
தமிழ்வாணனின் நண்பன்.
அம்மாவென்று அழைக்காத......
இது ஓர் அம்மாவைப் பற்றி சொல்லும் பாடல்: சிறிது நேரத்தில் பாடல் ஆரம்பமாகும். அப்படியில்லாவிட்டால் கீழுள்ள முகவரியில் சென்றும் தரவிறக்கிகொள்ளலாம்.


இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://download.35mb.com/thamilvanan/amma.mp3

இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். மே - 8 ம்திகதி உலகெங்கும் உள்ள அன்னையர்களை கௌரவிக்கும் நாளாக மறைந்துபோன அன்னையரை நினைவு கொள்ளும் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் 1908 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக முதன்முதலாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

(நான் அறிந்த தகவலின்படி) ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் Mothers's Day கொண்டாடப்படுகிறது.

ஒளிகொடுத்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாம் பால் கொடுக்கும் பசுவுக்கு நன்றி செலுத்தும் நாம் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு நன்றி செலுத்துகிறோமா?

இன்று வெளிநாடுகளில் பலர் தமது தாய் தந்தையரை மூதாளர் காப்பகங்களில் சேர்த்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பாசம் என்ற பிணைப்பில் நிலைநிறுத்தப்படும் சமுதாயம் அதனையே சமூகத்தின் ஆணிவேராக கொண்ட சமுதாயம் ஏன் இப்படி மாறிக்கொண்டிருக்கிறது?

இன்று தனது அம்மம்மாவை மூதாளர் விடுதியில் காணும் இன்றைய சிறுவர்கள் நாளைய அம்மம்மாவை என்ன செய்யபோகிறார்கள்?


பிகு 1: மே எட்டாம் திகதி அன்று உங்கள் அன்னைக்கு அன்பு பரிசளித்து அவளை பரவசப்படுத்துங்கள்.