|
எழுதமுடியாத காவியங்கள்
|
இன்று தமிழீழத்தில் மிகவும் முக்கியமான நாள். அதுதான் கரும்புலிகள் தினம். விடுதலைப் புலிகளிடமுள்ள தற்கொலைப்படையணி இலங்கைத்தீவு முழுவதும் பரவலாக பல தாக்குதல்களை தனித்தும், மரபுவழித் தாக்குதல் படையணிகளுடன் இணைந்தும் செய்திருக்கிறது. இவர்களது வரலாறுகள் எழுதப்படாத காவியங்களாகவும், வரையப்படாத சித்திரங்களாகவும் நீண்டு செல்கின்றது.
விடுதலைப்புலிகளின் கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாக இருந்திருக்கின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதல் இதே தினத்தில் கப்டன் மில்லர் எனப்படும் போராளியால் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பல தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் இறுதியாக கட்டுநாயக்கா விமானநிலையத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிகவும் முக்கியத்துவமானதாகும். விமானநிலையத்தில் இருந்த ஒரு பயணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அத்தாக்குதலை செய்திருந்தார்கள்.
தற்கொலைப்பாணியிலான இவ்வகை தாக்குதல்கள் வெவ்வேறு விடுதலைப் போராட்டங்களிலும், இரண்டாம் உலகப்போரின்போதும் பரவலாக கையாளப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் தற்போதுள்ள கணிப்புகளின்படி அதிக எண்ணிக்கையான தாக்குதல்கள் கரும்புலிகளாலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பொட்டு அம்மான்
இவ்வாறான தாக்குதல்கள் இரண்டாம் உலகப்போரின் போதும் பின்னர் பல்வேறு விடுதலை அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய கணிப்புகளின்படி அதிகளவிலான இத்தகைய தாக்குதல்கள் கரும்புலிகளாலே மேற்கொள்ளப்ட்டிருக்கின்றன. இவ்வகையான தாக்குதல் போர்முறை இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே கைக்கொள்ளப்பட்டிருப்பதாக சச்சி சிறிகாந்தா குறிப்பிடுகிறார். இதற்காக மகாபாரத போரிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டுகிறார்.
இன்றுவரை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கரும்புலிகளாக மரணமடைந்திருக்கிறார்கள். லெப்ரினன்ற் செங்கண்ணன் எனப்படும் தமிழகம் சிவகாசியை சொந்த இடமாக கொண்ட ஒருவரும் இவர்களுள் அடங்குகிறார். இவர் 1993 ஆம் ஆண்டு பூநகரி முகாம் மீதான தாக்குதலின்போது அதற்கு ஆதரவு வழங்குவதற்காக பலாலி விமானதளம் மீதான தாக்குதலில் மரணமடைந்திருக்கிறார்.
விடுதலைப்போராளிகள் ஒவ்வொருவரும் கரும்புலிகளாகவே கருதப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிரிகளினால் கைதுசெய்யப்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தமது கழுத்தில் உள்ள சயனைட் என்ற மருந்தை உட்கொள்வதன் மூலம் மரணமடைந்துவிடுவார்கள். ஆனாலும் எங்கே எப்போது தங்கள் சாவை நிர்ணயித்துக்கொள்ள வேணும் என்பதில் கரும்புலிகளின் நடவடிக்கை சாதாரணமான போராளிகளைவிட மேலோங்கியதாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. இவர்களுடைய தாக்குதல்களை பார்க்கும்போது பயங்கரமாகவும் அவர்களது வெளித்தெரியும் வரலாறுகளை படிக்கும்போது உணர்ச்சிமயமானதாகவும் இருக்கிறது.
நாங்கள் எப்போதும் சாவதற்கு தயார் எனக்கூறும் போராளிகள் இன்று உலகில் இவ்வாறான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதன் காரணமாக இவ்வகை தாக்குதல்கள் கண்டிக்கப்படுகின்றன. விடுதலை அமைப்புக்கள் எனக்கூறிக்கொள்ளும் சில நாசகார சக்திகளால் மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பாதிப்படையச்செய்துள்ளன. ஆனால் கரும்புலிகளை பொறுத்தவரை எந்தவொரு தாக்குதலும் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
கரும்புலிகளின் வரலாறுகள் ஒருபோதும் முழுமையாக வெளிவிடப்பட்டதில்லை. 1994 ஆம் ஆண்டு யூலைமாத விடுதலைப்புலிகள் இதழில் சிலதாக்குதல் சம்பவங்களை கோடுகாட்டி சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான இணைப்புக்களை கீழே இணைத்திருக்கிறேன். அதன்பின்னர் ஒரு தடவையும் அவ்வாறு வேறு சில சம்பவங்கள் கூறப்பட்டிருந்தன. இவை கரும்புலிகளின் மனவுணர்களை சிறியளவில் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதுபற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து அறியதரவும்.
இன்று தாயகத்தில் எங்களது குடும்பத்தினர்களோ அல்லது உறவினர்களோ மீளக்குடியேறி தமது சொந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் இந்த வீரர்களது தியாகம் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.
பக்கம் - 1 பக்கம் - 2 பக்கம் - 3 பக்கம் - 4 சாவதற்கான போட்டி
இன்றைய கரும்புலிகள் தினம் பற்றி விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளரின் விசேடபேட்டி
|
|
|
|