ரொயிட்டர் செய்தியாளரின் திருமலை நிலவரம் நேரடிப்பதிவு ஒன்று இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அப்பகுதியின் அபாய நிலையை அவரது கட்டுரை விளக்குகிறது. இயன்றவரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தகாலமாக தொடரும் போரில் செல்லையா சொர்ணலஷ்மி இரண்டு தடவைகள் தனது கணவனையும் இரண்டு குழந்தைகளையும் இழந்ததிருக்கிறார். இரண்டு தடவைகள் போரினால் இடம்பெயர்ந்த இவர், அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது இவர் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோர் காப்பகமும் சுனாமி தாக்குதலுக்குள்ளானது. அதனால் மூன்றாவது தடவையாக இடம்பெயர்ந்தார்.
தற்போது திருமலையில் சிங்கள – தமிழ் சமூகங்களுக்கான உறவுகள் மோசமடைந்ததை தொடர்ந்து, 60 வயதான அத்தாய் இப்போது மீண்டும் பாதுகாப்புதேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்.
“வேறு எங்கு போகமுடியும்?” கன்னங்களில் கண்ணீர் வழிய ரொயிட்டர் செய்தியாளரை - தமிழ் மொழியில் - கேட்டார். “ நான் மூன்று தடவை தொடர்ச்சியாக எனது வீட்டிலிருந்து பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்திருக்கிறேன். இனி வாழ்வதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?” என்கிறார் அவர். திருமலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனக்கலவரங்களை தொடர்ந்து பலர் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சரியான எண்ணிக்கையை நாளாந்த அடிப்படையில் சொல்லமுடியவில்லை. உதவி தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னியாய் – இதுதான் செல்லையா சொர்ணலஷ்மியின் சொந்த இடம் – திருகோணமலை நகரப்பகுதியின் வெளிப்புறமாக இருக்கிறது. அங்கு 16 வயதுடைய பாக்கியரசு பாஸ்கரன் வெள்ளிக்கிழமையன்று காணாமல்போனார். அதனை தொடர்ந்துதான் இவ்வாறான இடப்பெயர்வுகள் அதிகரித்தன. இராணுவத்தினர் அவ்வாறு தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என சொல்கிறார்கள். ஆனால் உள்ளுர் தமிழ்மக்கள், தாங்கள் அருகிலிருக்கும் இராணுவமுகாமிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக சொல்கிறார்கள். அடுத்தநாள் அந்தச் சிறுவனின் சடலம் தலையில் சுடப்பட்டநிலையில் வீதியில் போடப்பட்டுகிடந்தது.
போர் தொடங்கியதிலிருந்து அந்தச்சிறுவனின் குடும்பம் களிமண்ணாலான ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறது. அங்கு வந்திருந்த மெதடிஸ்த பாதிரியார் “ நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவத்தினர் மீதான தாக்குதலை விரும்பவில்லை. இவ்வாறு மக்கள் அனியாயமாக சுட்டுக்கொல்லப்படுவதையும் விரும்பவில்லை. ஆனால் இவ்வாறான அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகள் நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற நிலைக்கே இட்டுச்செல்லும். விடுதலைப்புலிகளை தவிர தமிழருக்கு பாதுகாப்பாக ஒருவருமில்லை.” என்கிறார்
அந்தச்சிறுவனின் தாயார் தனது குடிசைக்கு முன்னால் கிடத்தப்பட்டுள்ள தனது மகனின் உடலுக்கு முன்னால் அழுதுகொண்டிருக்கிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ளோர் இடம்பெயர்வதற்கு தமது உடைமைகளை ஆயத்தம்செய்துகொண்டிருக்கிறார்கள்.
நடேசபுரம் – கன்னியாய் பிரதேசத்திற்கு அடுத்துள்ள கிராமம் – ஏற்கனவே அங்கிருந்தோர் இடம்பெயர்ந்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் சிங்கள காடையர்களால் பல வீடுகள் எரியூட்டப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பு தேடி வெளியேறிவிட்டார்கள். போரில் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியேறுவதற்காக கட்டப்பட்ட ஒரு தொகுதி வீடுகளும், மக்கள் வெளியேறிய வீடுகளும், மிகுதி எரியூட்டப்பட்ட வீடுகளுமாக அக்கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. சில இராணுவத்தினர், பொலிசார், மாடுகள், நாய்கள், கோழிகள் மட்டுமே அங்கு தற்போது இருக்கின்றன.
இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பாடசாலைகளிலேதான் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வரோதயாநகர் – திருகோணமலையிலிருந்து மேற்காக அமைந்திருக்கும் கிராமம் – இங்கு 650 வரையான மக்கள் ஏற்கனவே தஞ்சமடைந்திருப்பதாக தொண்டர் அமைப்புக்கள் சொல்கின்றன. சிறிய அறைகளிலே ( smaller than a tennis court) 100 இற்கும் மேற்பட்ட மக்கள் நித்திரை கொள்கிறார்கள். "நாங்கள் எப்படியோ இப்போதைக்கு சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் நீண்டநாளைக்கு இங்கு தங்கமுடியாது. நாங்கள் எங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச்செல்ல விரும்புகிறோம். அனைத்தும் சமாதானபேச்சுவார்த்தைகளிலேதான் தங்கியுள்ளது” என்கிறார் 27 வயதான இரண்டு குழந்தைகளின் தாய்.
----------------------------------- தொடர்ந்து வந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, நேற்று திருமலைப்பிரதேசத்தில் 06 சிங்கள அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை செய்யபட்டிருக்கிறார்கள்.
----------------------------------- அண்மைக்காலமாக திருமலையில் தொடர்ந்து வரும் இவ்வாறான சம்பவங்களுக்கு நடந்துமுடிந்து திருகோணமலை நகரசபை தேர்தலே காரணமாகும். அங்கு தமிழரசு கட்சி திருமலை நகரசபையை கைப்பற்றியதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கதொடங்கியது. திருகோணமலையே தமிழ்மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பிரதேசமாகும். அதனால் திருகோணமலையில் சிங்கள பெரும்பான்மையை நிலைநிறுத்துவதன் மூலம் அதனை சிங்களவர்கள் கைப்பற்ற வேண்டுமென இனவாத ஜேவிபி விரும்புகிறது. போர்நடந்த காலத்தில் தமிழர்கள் விரட்டப்பட்டு பின்னர் சிங்கள குடியேற்றங்கள் உருவானது. முன்னர் தமிழ்ப்பெயர்களுடன் இருந்த ஊர்கள் சிங்கள ஊர்ப்பெயர்களாக மாற்றப்பட்டன.
தற்போதைய சமாதான காலத்தில் தமிழ்மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீளக்குடியேறியிருந்தார்கள். ஆனால் அதனை சகித்துக்கொள்ளாத சிங்கள இனவாதசக்திகள் தங்கள் பலத்தை காட்டும் முகமாக திருமலை நகரபகுதியில் பெரிய புத்தர் சிலையை இரவிரவாக நிறுவி இராணுவ பாதுகாப்புடன் தற்போது அதனை வைத்துள்ளனர். வணக்கத்துக்குரிய புத்தர் சிலையை இனவாத ஆக்கிரமிப்பின் குறியீடாக மாற்றியது இனவாத சிங்கள அரசு.
நடந்துமுடிந்த தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த சிங்கள காடையர்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவை தலைவரை இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து சுட்டுக்கொன்றார்கள். பின்னர் திருமலை ச்நதையில் திட்டமிட்டு இனப்படுகொலை ஒன்றை அரங்கேற்றி 20 தமிழ்மக்களை சுட்டும் வெட்டியும் கொன்றார்கள். இவ்வாறு தமிழ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வெளியேற்றுவதன்மூலம் திருமலை பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்கள அரசு முயற்சி செய்கிறது.
அவ்வாறான இனக்கலவரங்களை ஏற்படுத்துவதற்காக கூட சிங்கள இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று 06 அப்பாவி சிங்கள மக்களை கொன்றிருக்கலாம். இதன்மூலம் மீண்டும் இனக்கலவரத்தை உருவாக்கலாம். அல்லது தமிழ் கடும்போக்காளர்கள் பழிக்குப்பழி என்ற ரீதியில் இத்தாக்குதலை செய்திருக்கலாம்.
இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து, பெரு நிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத் தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஒரளவு இந்நிலைகளை மாற்றியிருந்தபோதும் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புச் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், தமிழ்பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறிலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலப் புலிகள் பொறுமை காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளை இந்நடவடிக்கைளிற்குப் பதிலடியாக பொங்கியெழும் மக்கள் படையாகிய நாம் படைகளிற்கெதிரான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வேளையில் தாக்குதல் நடத்தியவர்களை தாக்கமுடியாத கையாலாகாத் தனமாக ஸ்ரீலங்கா படைகளும், சிங்களவர்களும் இணைந்து தமிழ்மக்கள் மீது ஒர் இன அழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதனைப் பொறுமையுடன் பார்த்திருந்த நாம் திருமலைநகர், துவரங்காடு, கன்னியா, கப்பல்துறை, சீனக்குடா, என்று விரிந்து வந்த தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பாரதிபுரம் கிளிவெட்டி என்று பரவத்தொடங்கியுள்ளது.
நாளாந்தம் தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் தமிழ் பெண்கள் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தமிழ் மக்கள் சொத்துக்கள் சூறையாடப்படுதல் அழிக்கப்படுதல் என்பனவும் தொடர்கிறது. எனவே பொறுமை காத்த பொங்கியெழும் மக்கள் படையணியாகிய நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டி மொறவேவா(இது கூட தமிழர்கள் வாழ்ந்த முதலிக்குளம்) பகுதியில் பழிதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
இனிவரும் வரும் காலங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பழிவாங்கும் படலத்தைத் தொடரவுள்ளோம். உயிர்கள் பெறுமதியானவை. ஆனால் சாவுதான் சாவை நிறுத்துமெனில் நாம் அதனைச் செய்வதற்குத் தயங்கப்போவதுமில்லை. இது எதிரிகளுக்கான இறுதி எச்சரிக்கை.
எச்சரிக்கை என்பது இருக்கட்டும். ஆனால், உலக அரங்கிலே பேசும்போது, மிகவும் இலகுவாக பாதிக்கப்பட்டவர்களே பாதிப்பவர்களாகத் தோன்ற இப்படியான அறிக்கைகளும் அரைவேக்காட்டுத்தனமான நிதர்சனம்.கொம் செய்திக்கூத்துகளுமே காரணம். சிவத்தம்பி சொன்னதுபோல, நிதானமான செயற்பாடுதான் இக்காலகட்டத்திலே அவசியமானது. பிபிசி போன்ற செய்தித்தாபனங்கள்கூட அரசபடைகளின் இழப்புக்கும் சிங்களமக்களின் இறப்புக்குமே அனுதாபம் தருவதுபோன்ற வகையிலே செய்திவிடுவதினைக் காணவேண்டும். விக்கினேஸ்வரன் கொலை, கருணாகுழுவினைத் தூண்டுதல் போன்ற விளிம்புக்குத்தள்ளும் உபாயத்தினை (brinkmanship) அரசு செய்கின்றபோது, விடுதலைப்புலிகளிலே அப்பழியினைப் போட்டு பிபிசி செய்தியாளர் துமீத்த உலுத்ரா செய்தி எழுதுகின்றார்.
கனடாவின் பழமைவாத அரசின் நடவடிக்கை, கோணலான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையென்ற திட்டமிட்ட தமிழர் எதிர்ச்செயற்பாடுகளிடையே சும்மா "வெட்டுவோம் கொல்வோம்" என்று அலறுவதினாலே, இருக்கின்ற ஏற்பட்ட பாதிப்பினைக்கூட அக்கறை கொண்டவர்களும் தயங்கியே பார்க்கும் நிலை ஏற்படுகின்றது. இது பயனில்லாதது பட்டுமல்ல, இருக்கும் நிலையையும் இன்னும் கோரப்படுத்துவதுமாகும். இத்தனை கொடுமைகளையும் மறைமுகமாகச் செய்யும் இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலே விடுதலைப்புலிகளை நசுக்கும் முயற்சியிலே இப்போது மும்முரமாக ஈடுபடுகின்றது. அதற்கு இப்படியான அரைவேக்காட்டுத்தனமான 'கொல்வோம் கொளுத்துவோம்' அறிக்கை கையிலே விழுந்த பூமாலை. நீங்களேனும் கொஞ்சம் நிதானமாகப் பதியுங்கள்
7 Comments:
என்ன செய்யிறாங்கள் உவங்கள்?
ஆருக்குப் பயந்து பொத்திக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு ஒரு மண்ணும் விளங்கேல்லை.
By
Anonymous, at Sunday, April 23, 2006 6:48:00 PM
முன்னைய பா.உ. இராஜவரோதயத்தின் நினைவாக அமைக்கப்பட்ட குடியிருப்பு
By
Anonymous, at Sunday, April 23, 2006 9:03:00 PM
தொடர்ந்து வந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, நேற்று திருமலைப்பிரதேசத்தில் 06 சிங்கள அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை செய்யபட்டிருக்கிறார்கள்.
-----------------------------------
அண்மைக்காலமாக திருமலையில் தொடர்ந்து வரும் இவ்வாறான சம்பவங்களுக்கு நடந்துமுடிந்து திருகோணமலை நகரசபை தேர்தலே காரணமாகும். அங்கு தமிழரசு கட்சி திருமலை நகரசபையை கைப்பற்றியதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கதொடங்கியது. திருகோணமலையே தமிழ்மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பிரதேசமாகும். அதனால் திருகோணமலையில் சிங்கள பெரும்பான்மையை நிலைநிறுத்துவதன் மூலம் அதனை சிங்களவர்கள் கைப்பற்ற வேண்டுமென இனவாத ஜேவிபி விரும்புகிறது. போர்நடந்த காலத்தில் தமிழர்கள் விரட்டப்பட்டு பின்னர் சிங்கள குடியேற்றங்கள் உருவானது. முன்னர் தமிழ்ப்பெயர்களுடன் இருந்த ஊர்கள் சிங்கள ஊர்ப்பெயர்களாக மாற்றப்பட்டன.
தற்போதைய சமாதான காலத்தில் தமிழ்மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீளக்குடியேறியிருந்தார்கள். ஆனால் அதனை சகித்துக்கொள்ளாத சிங்கள இனவாதசக்திகள் தங்கள் பலத்தை காட்டும் முகமாக திருமலை நகரபகுதியில் பெரிய புத்தர் சிலையை இரவிரவாக நிறுவி இராணுவ பாதுகாப்புடன் தற்போது அதனை வைத்துள்ளனர். வணக்கத்துக்குரிய புத்தர் சிலையை இனவாத ஆக்கிரமிப்பின் குறியீடாக மாற்றியது இனவாத சிங்கள அரசு.
நடந்துமுடிந்த தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த சிங்கள காடையர்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவை தலைவரை இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து சுட்டுக்கொன்றார்கள். பின்னர் திருமலை ச்நதையில் திட்டமிட்டு இனப்படுகொலை ஒன்றை அரங்கேற்றி 20 தமிழ்மக்களை சுட்டும் வெட்டியும் கொன்றார்கள். இவ்வாறு தமிழ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வெளியேற்றுவதன்மூலம் திருமலை பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்கள அரசு முயற்சி செய்கிறது.
அவ்வாறான இனக்கலவரங்களை ஏற்படுத்துவதற்காக கூட சிங்கள இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று 06 அப்பாவி சிங்கள மக்களை கொன்றிருக்கலாம். இதன்மூலம் மீண்டும் இனக்கலவரத்தை உருவாக்கலாம். அல்லது தமிழ் கடும்போக்காளர்கள் பழிக்குப்பழி என்ற ரீதியில் இத்தாக்குதலை செய்திருக்கலாம்.
இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.
By
thamillvaanan, at Monday, April 24, 2006 4:00:00 PM
By
Anonymous, at Monday, April 24, 2006 5:36:00 PM
திருமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து, பெரு நிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத் தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஒரளவு இந்நிலைகளை மாற்றியிருந்தபோதும் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புச் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், தமிழ்பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறிலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலப் புலிகள் பொறுமை காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளை இந்நடவடிக்கைளிற்குப் பதிலடியாக பொங்கியெழும் மக்கள் படையாகிய நாம் படைகளிற்கெதிரான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வேளையில் தாக்குதல் நடத்தியவர்களை தாக்கமுடியாத கையாலாகாத் தனமாக ஸ்ரீலங்கா படைகளும், சிங்களவர்களும் இணைந்து தமிழ்மக்கள் மீது ஒர் இன அழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதனைப் பொறுமையுடன் பார்த்திருந்த நாம் திருமலைநகர், துவரங்காடு, கன்னியா, கப்பல்துறை, சீனக்குடா, என்று விரிந்து வந்த தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பாரதிபுரம் கிளிவெட்டி என்று பரவத்தொடங்கியுள்ளது.
நாளாந்தம் தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் தமிழ் பெண்கள் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தமிழ் மக்கள் சொத்துக்கள் சூறையாடப்படுதல் அழிக்கப்படுதல் என்பனவும் தொடர்கிறது. எனவே பொறுமை காத்த பொங்கியெழும் மக்கள் படையணியாகிய நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டி மொறவேவா(இது கூட தமிழர்கள் வாழ்ந்த முதலிக்குளம்) பகுதியில் பழிதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
இனிவரும் வரும் காலங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பழிவாங்கும் படலத்தைத் தொடரவுள்ளோம். உயிர்கள் பெறுமதியானவை. ஆனால் சாவுதான் சாவை நிறுத்துமெனில் நாம் அதனைச் செய்வதற்குத் தயங்கப்போவதுமில்லை. இது எதிரிகளுக்கான இறுதி எச்சரிக்கை.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
பொங்கியெழும் மக்கள் படை
திருமலை மாவட்டம்.
By
Anonymous, at Tuesday, April 25, 2006 9:02:00 AM
எச்சரிக்கை என்பது இருக்கட்டும். ஆனால், உலக அரங்கிலே பேசும்போது, மிகவும் இலகுவாக பாதிக்கப்பட்டவர்களே பாதிப்பவர்களாகத் தோன்ற இப்படியான அறிக்கைகளும் அரைவேக்காட்டுத்தனமான நிதர்சனம்.கொம் செய்திக்கூத்துகளுமே காரணம். சிவத்தம்பி சொன்னதுபோல, நிதானமான செயற்பாடுதான் இக்காலகட்டத்திலே அவசியமானது. பிபிசி போன்ற செய்தித்தாபனங்கள்கூட அரசபடைகளின் இழப்புக்கும் சிங்களமக்களின் இறப்புக்குமே அனுதாபம் தருவதுபோன்ற வகையிலே செய்திவிடுவதினைக் காணவேண்டும். விக்கினேஸ்வரன் கொலை, கருணாகுழுவினைத் தூண்டுதல் போன்ற விளிம்புக்குத்தள்ளும் உபாயத்தினை (brinkmanship) அரசு செய்கின்றபோது, விடுதலைப்புலிகளிலே அப்பழியினைப் போட்டு பிபிசி செய்தியாளர் துமீத்த உலுத்ரா செய்தி எழுதுகின்றார்.
கனடாவின் பழமைவாத அரசின் நடவடிக்கை, கோணலான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையென்ற திட்டமிட்ட தமிழர் எதிர்ச்செயற்பாடுகளிடையே சும்மா "வெட்டுவோம் கொல்வோம்" என்று அலறுவதினாலே, இருக்கின்ற ஏற்பட்ட பாதிப்பினைக்கூட அக்கறை கொண்டவர்களும் தயங்கியே பார்க்கும் நிலை ஏற்படுகின்றது. இது பயனில்லாதது பட்டுமல்ல, இருக்கும் நிலையையும் இன்னும் கோரப்படுத்துவதுமாகும். இத்தனை கொடுமைகளையும் மறைமுகமாகச் செய்யும் இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலே விடுதலைப்புலிகளை நசுக்கும் முயற்சியிலே இப்போது மும்முரமாக ஈடுபடுகின்றது. அதற்கு இப்படியான அரைவேக்காட்டுத்தனமான 'கொல்வோம் கொளுத்துவோம்' அறிக்கை கையிலே விழுந்த பூமாலை. நீங்களேனும் கொஞ்சம் நிதானமாகப் பதியுங்கள்
By
Anonymous, at Tuesday, April 25, 2006 9:21:00 AM
திருமலை சம்பந்தமான உண்மை நிலவரத்தை வெளியிடும் HUman Right Watch இன் கருத்துக்களை அடுத்த பதிவில் இடுகின்றேன்.
By
thamillvaanan, at Tuesday, April 25, 2006 1:45:00 PM
Post a Comment
<< Home