<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமலை படங்கள்


தற்போது மகிந்த ராஜபக்சவின் பழிவாங்கும் தாக்குதல் என்ற பெயரில் நடாத்தப்பட்ட திருமலை மீதான விமானதாக்குதல் என்பது சிங்கள இனவாதத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற தாக்குதலாகும்.

சிறிலங்கா படைத்தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் யார் செய்தார்களோ நாம் அறியோம். ஆனால் அதர்மம் தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநாட்ட அவனே பிறப்பெடுப்பதாய் ஐதீகம். இத்தாக்குதல் நடாத்தப்பட்ட இடமானது சாதாரண பொதுசன நடமாட்ட பிரதேசம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களும் சாதாரண அப்பாவிபொதுமக்களும் அல்ல. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் உள்ளே, இராணுவ தலைமையகத்தின் உள்ளே நடந்திருக்கிறது.

படுகாயமடைந்த இராணுவத்தளபதி சமாதான காலத்தில் நடாத்தப்பட்ட பின்வரும் குறிப்பிடத்தக்க கொலைகளுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார்.
1. பத்திரிகையாளர் நடேசன்
2. பத்திரிகையாளர் தராக்கி
3. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு
4. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம்
5. மக்கள் பேரவை தலைவர் விக்கினேஸ்வரன்
6. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் கெளசல்யன்

அப்படியிருக்க, இத்தாக்குதலுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் திருமலையில் தமிழ்மக்கள்மீது தாக்குதல் ஏன்? 15 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.(தாக்குதலுக்கு உள்ளான சிறிமுருகன் பாலர் பாடசாலையை மேலுள்ள படத்தில் காணலாம்).
திருமலை - Human Rights Watch
தமிழ்மக்கள் மீது திருமலையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலை பற்றிய மனித உரிமைகள் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான செய்தியை தமிழாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். நடுநிலை சர்வதேச ஊடகம் என்ற ரீதியில் அதன் கருத்துக்கள் முக்கியமானது.

அரசானது திருமலையில் தமிழ்மக்கள் மீது ஆயுதபாணிகளால் நடாத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளால் சிறிலங்கா அரச படைகள் மீது நடாத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை தொடர்ந்து இப்படுகொலைகள் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின்படி, கிளைமோர் தாக்குதல் நடைபெற்ற 15 நிமிடங்களுக்குள் வாள் கட்டைகள் கொண்ட 100 – 150 சிங்களவர்கள் தமிழ் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். ஏப்ரல் 12 தொடக்கம் 16 வரை நடாத்தப்பட்ட இவ்வாறான தாக்குதலில் குறைந்தது 06 பெண்கள் உட்பட 20 வரையான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 75 வரையான பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச படைகள் செயற்படாதது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவோ சிங்களவர்களாகவோ முஸ்லிம்களாகவோ யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.” என மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் குறிப்பிடுகிறார்.

இத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்ககூடிய பக்கச்சார்பற்ற சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும்படி மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறது.

நடந்துமுடிந்த தாக்குதலில் 100 வரையான வீடுகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். திருமலை வர்த்தக நிறுவனங்களின் ஒன்றியத்தின் தகவல்படி 32 வரையான வியாபார நிறுவனங்கள் சூறையாடப்பட்டோ சேதமாக்கப்பட்டோ அல்லது எரித்தோ அழிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது அப்பகுதியில் நின்ற இராணுவத்தினரும் பொலிசாரும் சுமார் 45 – 90 நிமிடம் வரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஹற்றன் நஷனல் வங்கியின் எச்சரிக்கை அலாரம் இரண்டு மணித்தியாலங்களாக ஒலித்துக்கொண்டிருந்திருந்ததாகவும் கூறப்படும் அதேவேளை இலங்கை வங்கியின் உள்ளே வருபவர்களை தடுக்கவேண்டாம் என அவ்வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு பொலிசார் கூறியிருக்கிறார்.

இத்தாக்குதல் தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் போதுமானவையல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு நாட்களாக அரசாங்கத்தால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட்டதாகவோ தமிழ்மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்ததாகவோ மனித உரிமைகள் அமைப்பு அறிந்திருக்கவில்லை.

“வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா அரசானது காத்திரமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவிடத்து இவ்வாறான இனக்கலவரங்கள் பரவக்கூடும். இத்தாக்குதல் நடைபெற்று பல நாட்கள் கடந்தநிலையிலும் மகிந்த நாஜபக்ச உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை” என பிறட் அடம்ஸ் கூறுகிறார்.



மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கைபற்றிய ரொயிட்டர் செய்தி இணைப்பு

இது திருமலை தொடர்பான பாடல் ஒன்று. லண்டன் பாலா என்பவரால் தயாரிக்கப்பட்டது.
இப்பாடலை நீங்களும் கேளுங்கள்.நன்றி நிதர்சனம்.
திருமலை எரியுது!
ரொயிட்டர் செய்தியாளரின் திருமலை நிலவரம் நேரடிப்பதிவு ஒன்று இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அப்பகுதியின் அபாய நிலையை அவரது கட்டுரை விளக்குகிறது. இயன்றவரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.


இரண்டு தசாப்தகாலமாக தொடரும் போரில் செல்லையா சொர்ணலஷ்மி இரண்டு தடவைகள் தனது கணவனையும் இரண்டு குழந்தைகளையும் இழந்ததிருக்கிறார். இரண்டு தடவைகள் போரினால் இடம்பெயர்ந்த இவர், அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது இவர் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோர் காப்பகமும் சுனாமி தாக்குதலுக்குள்ளானது. அதனால் மூன்றாவது தடவையாக இடம்பெயர்ந்தார்.

தற்போது திருமலையில் சிங்கள – தமிழ் சமூகங்களுக்கான உறவுகள் மோசமடைந்ததை தொடர்ந்து, 60 வயதான அத்தாய் இப்போது மீண்டும் பாதுகாப்புதேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்.

“வேறு எங்கு போகமுடியும்?” கன்னங்களில் கண்ணீர் வழிய ரொயிட்டர் செய்தியாளரை - தமிழ் மொழியில் - கேட்டார். “ நான் மூன்று தடவை தொடர்ச்சியாக எனது வீட்டிலிருந்து பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்திருக்கிறேன். இனி வாழ்வதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?” என்கிறார் அவர்.

திருமலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனக்கலவரங்களை தொடர்ந்து பலர் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சரியான எண்ணிக்கையை நாளாந்த அடிப்படையில் சொல்லமுடியவில்லை. உதவி தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாய் – இதுதான் செல்லையா சொர்ணலஷ்மியின் சொந்த இடம் – திருகோணமலை நகரப்பகுதியின் வெளிப்புறமாக இருக்கிறது. அங்கு 16 வயதுடைய பாக்கியரசு பாஸ்கரன் வெள்ளிக்கிழமையன்று காணாமல்போனார். அதனை தொடர்ந்துதான் இவ்வாறான இடப்பெயர்வுகள் அதிகரித்தன. இராணுவத்தினர் அவ்வாறு தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என சொல்கிறார்கள். ஆனால் உள்ளுர் தமிழ்மக்கள், தாங்கள் அருகிலிருக்கும் இராணுவமுகாமிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக சொல்கிறார்கள். அடுத்தநாள் அந்தச் சிறுவனின் சடலம் தலையில் சுடப்பட்டநிலையில் வீதியில் போடப்பட்டுகிடந்தது.


போர் தொடங்கியதிலிருந்து அந்தச்சிறுவனின் குடும்பம் களிமண்ணாலான ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறது. அங்கு வந்திருந்த மெதடிஸ்த பாதிரியார் “ நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவத்தினர் மீதான தாக்குதலை விரும்பவில்லை. இவ்வாறு மக்கள் அனியாயமாக சுட்டுக்கொல்லப்படுவதையும் விரும்பவில்லை. ஆனால் இவ்வாறான அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகள் நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற நிலைக்கே இட்டுச்செல்லும். விடுதலைப்புலிகளை தவிர தமிழருக்கு பாதுகாப்பாக ஒருவருமில்லை.” என்கிறார்

அந்தச்சிறுவனின் தாயார் தனது குடிசைக்கு முன்னால் கிடத்தப்பட்டுள்ள தனது மகனின் உடலுக்கு முன்னால் அழுதுகொண்டிருக்கிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ளோர் இடம்பெயர்வதற்கு தமது உடைமைகளை ஆயத்தம்செய்துகொண்டிருக்கிறார்கள்.


நடேசபுரம் – கன்னியாய் பிரதேசத்திற்கு அடுத்துள்ள கிராமம் – ஏற்கனவே அங்கிருந்தோர் இடம்பெயர்ந்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் சிங்கள காடையர்களால் பல வீடுகள் எரியூட்டப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பு தேடி வெளியேறிவிட்டார்கள். போரில் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியேறுவதற்காக கட்டப்பட்ட ஒரு தொகுதி வீடுகளும், மக்கள் வெளியேறிய வீடுகளும், மிகுதி எரியூட்டப்பட்ட வீடுகளுமாக அக்கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. சில இராணுவத்தினர், பொலிசார், மாடுகள், நாய்கள், கோழிகள் மட்டுமே அங்கு தற்போது இருக்கின்றன.


இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பாடசாலைகளிலேதான் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வரோதயாநகர் – திருகோணமலையிலிருந்து மேற்காக அமைந்திருக்கும் கிராமம் – இங்கு 650 வரையான மக்கள் ஏற்கனவே தஞ்சமடைந்திருப்பதாக தொண்டர் அமைப்புக்கள் சொல்கின்றன. சிறிய அறைகளிலே ( smaller than a tennis court) 100 இற்கும் மேற்பட்ட மக்கள் நித்திரை கொள்கிறார்கள். "நாங்கள் எப்படியோ இப்போதைக்கு சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் நீண்டநாளைக்கு இங்கு தங்கமுடியாது. நாங்கள் எங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச்செல்ல விரும்புகிறோம். அனைத்தும் சமாதானபேச்சுவார்த்தைகளிலேதான் தங்கியுள்ளது” என்கிறார் 27 வயதான இரண்டு குழந்தைகளின் தாய்.

ரொயிட்டர் செய்தி இணைப்பு
சமாதானத்தின் எதிரிகள் யார்?
இன்று இலங்கை ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு காட்டூன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இன்றைய இலங்கை அரசியல் நிலையை எவ்வாறு ஒரு சாரார் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அது பிரதிபலிக்கிறது. விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை தவிர்த்துவருகிறார்கள் என்பது போன்ற தோற்றம் அது.


உண்மையில் விடுதலைப்புலிகள் தற்போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்துக்கொண்டுசெல்வதை விரும்பவில்லை. ஆனால் விரைவாக தீர்வை காணவேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடித்து, சமாதானத்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவித்து, தமிழ்ப்பற்றாளர்களை கொன்று, தமிழ்த்தேசியத்தின் உயிர்த்துடிப்பை இல்லாதொழிக்கவிரும்புகிறது சிங்கள அரசு.

Image hosting by Photobucketதுணைப்படைகளின் ஆயுதக்களைவை அடுத்தசுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிறைவேற்றுவதாக சிங்கள அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு மாறாக துணைப்படைகளின் செயற்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. தமிழ்த்தேசியபற்றாளர் விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ்ப்போராளிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், விடுதலைப்புலிகளின் பிராந்திய தளபதிகளின் பயணஒழுங்கு பிரச்சனைக்குரியதாக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் வன்னிபெருநிலப்பரப்பு, திருகோணமலையின் ஒரு பகுதி, மட்டக்களப்பு – அம்பாறை பிரதேசத்தின் குறிப்பிட்டளவான பகுதிகள் என்பன அடங்குகின்றன. ஆனால் அப்பகுதிகள் தரைப்பகுதியூடாக தொடர்பட்டவையாக இல்லை. அவ் இடைப்பட்ட பகுதிகள் சிங்கள அரச ஆளுகைக்குள் இருக்கின்றன. தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையின் படி விடுதலைப்புலிகளால் அப்பபகுதிகளுக்கு ஊடாக செல்லமுடியாது.

போர்க்காலத்தின்போது, விடுதலைப்புலிகளின் ஆளணிகள் தேவைக்கேற்ப வடக்கிலிருந்து கிழக்குக்கும் கிழக்கிலிருந்து வடக்குக்கும் நகர்த்தப்பட்டன. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் அக்காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு சென்றது கூட கட்டுநாயக்கா விமானதளமூடாக அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பாதுகாப்புடனே அவர் தமிழீழ எல்லைகளை கடந்து சென்றார். போர்க்காலத்தின்போது அனைத்து நாடுகளின் ஆயுத, தொழிநுட்ப, புலனாய்வு உதவிகளோடு தமிழ்ப்பிரதேசங்கள் முற்றுகையிடப்பட்டன. அப்போது அதனை முறியடிப்பதற்கான விடுதலைப்புலிகளின் வழங்கல்கள் அனைத்தும் கடலூடாகவே இருந்தது. அவ்வாறான வழங்கல் ஒன்றின்போது தாக்குதலுக்குள்ளான விடுதலைப்புலிகளின் கப்பலையே படத்தில் காண்கிறீர்கள். தமிழீழ கடலில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அப்போது இருந்தது.


கடற்புலிகளின் வழங்கல் கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளான நிலையில்

தற்போது அமுலில் உள்ளதாக கூறப்படும் போர்நிறுத்தம் மூலம் விடுதலைப்புலிகளின் கடல்வழி செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரச தலைவரே நாடு நாடாக சென்று இராணுவ ஒப்பந்தங்களை செய்து இராணுவத்தை பலப்படுத்தும் அதேவேளை, விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு கூட செல்லமுடியாதவாறும் தமது ஆயுத பலத்தை பெருக்கமுடியாதவாறும் போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் உள்ளன.

ஆனாலும் சமாதான பேச்சுவார்த்தைகளில் நெகிழ்வுபோக்கை காண்பித்து, தமது தளபதிகளை வன்னிக்கு அழைத்துவர - வழமையான சமாதானகால நடைமுறைப்படி - ஏற்பாடு செய்துதரும்படி அவர்களால் கேட்கப்பட்டடது. சமாதான தீர்வில் உண்மையான பற்றுறுதி சிங்கள அரசுக்கு இருந்திருந்தால் வழமையான நடைமுறைகளுக்கு ஏற்ப ஹெலிகொப்ரர் ஊடாக தளபதிகளின் போக்குவரத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும்.


கடற்புலிகளின் தாக்குதல் படகு ஒன்று

ஹெலிகொப்ரர் ஊடான போக்குவரத்தை நிராகரித்த அரசு கண்காணிப்புகுழுவின் பிரசன்னத்துடன் தமிழீழ கடலூடாக தளபதிகள் சென்றுவர இணங்கியது. அதற்குகூட இணங்கிய புலிகள் அவ்வாறு பயணிக்க ஆயத்தமாக இருந்தார்கள். இறுதிநேரத்தில் சிங்கள கடற்படைக்கலங்கள் மூலம், அவர்கள் செல்ல இருந்த கடற்கலத்தை முற்றுகையிட்டு, விரும்பத்தகாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். போர்க்காலத்தின்போது அப்பகுதியில் சிங்கள கடற்கலங்கள பயணிக்கவேண்டுமாக இருந்தால் தொடரணியாகவே( ஏறத்தாழ 10 இற்கும் மேற்பட்ட கலங்கள்) பயணிக்கவேண்டும். அதுவும் ஆழக்கடலூடாகவே அப்போக்குவரத்துக்கள் இடம்பெறும். அந்தளவுக்கு விடுதலைப்புலிகளின் கடல் ஆதிக்கம் இருந்தது.


இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளின் சுயகெளரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் – விடுதலைப்புலிகள் செல்லும் ஒரு கடற்கலத்தை முற்றுகையிட்டவாறு சிறைக்கைதிகளை போல தமது கடற்பரப்பில் செல்ல -விடுதலைப்புலிகளால் முடியாது. இதேநேரத்தில், 1987 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை மீட்டி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

தற்போது தனியார் ஹெலிகொப்ரர்களை வாடகைக்கு அமர்த்தி பயணஒழுங்குகளை ஏற்படுத்துமாறு சிங்கள அரசு கூறியிருக்கிறது. ஆனால் அவ்வாறான பயண ஒழுங்குக்கு கூட பல நிபந்தனைககள் சொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் தமது பயணகாலத்தை – அதாவது சென்று திரும்புவதற்கான காலம் – 72 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது போன்ற சினமூட்டக்கூடிய நிபந்தனைகளையும் உள்ளடக்கி உள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு சின்ன சின்ன விடயங்களிலே கூட, ஒரு இணக்கமான முடிவுக்கு வருவதில் தடைகளை ஏற்படுத்தும் அரசு, வெளிஉலகில் தாங்கள் நெகிழ்வுபோக்குடன் செயற்படுவதாக காட்டிக்கொள்கிறது. அதில் அது வெற்றியும் அடைந்திருக்கலாம்.

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளின் உள்ளுர் போக்குவரத்துக்களை முடக்கி, பிராந்திய தளபதிகளுடான நேரடி தொடர்புகளுக்கு தடையை ஏற்படுத்தி, இன்னொரு புறத்தில் துணைஆயுதப்படைகளின் உதவியுடன் இனப்படுகொலையை ஏவிவிடும் சிங்கள அரசுடன் பேசுவதில் என்ன இருக்கிறது?

படங்கள் விக்கிபீடியா, புதினம், Dailymirror.
தொடரும் படுகொலைகள்
தமிழீழ தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூர் எனும் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த ஐந்து அப்பாவி மக்களை சிறிலங்கா படைகள் சுட்டுக்கொன்றுள்ளனர். யாழ்ப்பாண மாநகராட்சி அலுவலர் ஒருவர் உட்பட ஐந்து பொதுமக்களையும் வயலுக்கு குறுக்காக ஓடும்படி படி பணித்து, ஓடவிட்டு பின்னால் நின்று மிருக்கத்தனமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

Image hosting by Photobucket
வயல்வெளியில் ஓடவிட்டு சுடப்பட்ட ஐந்து அப்பாவித்தமிழர்கள்.

அண்மையில் திருமலைலையைச் சேர்ந்த தமிழ்த்தேசப்பற்றாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். சிறிலங்கா புலனாய்வு அமைப்பினரால் திட்டமிட்டு அவர் கொலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து திருமலையில் சிங்கள காடையர்களால் நடாத்தப்பட்ட இனப்படுகொலையில் இருபதுக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும்போது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இராணுவத்தினர் மீதான தாக்குதலைi கண்டிப்பதுடன் அவர்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பாராட்டுப்பத்திரம் கொடுப்பது வேதனையளிக்கிறது. எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அதனை கண்டிக்காத நாடுகளிடமிருந்து தற்போதைய நிலையில் ஈழத்தமிழ் மக்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

Image hosting by Photobucket
தங்கள் உறவுகளை வயல்வெளியில் இழந்துதவிக்கும் உறவுகள்

ஈழத்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் குறிப்பிட்ட கருத்து முக்கியமானதாகும். எந்தவொரு நியாயமான விடுதலைப்போராட்டமும் தனது இடைக்காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அப்போராட்டமானது தீர்மானகரமான இறுதி இலக்கை அண்மிக்கும்போது அவ்வாறான ஆதரவை தக்கவைத்துக் கொள்ளமுடியாது. அந்தவகையில்தான், அமெரிக்கா சார்பு நாடுகள் ஈழவிடுதலைக்கான அடிப்படையை ஏற்றுக்கொண்டபோதும், தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி வருவதை நோக்கவேண்டியிருக்கிறது.

சிங்கள இனவாத அரச இயந்திரம் திருத்தப்படகூடியது என சர்வதேசம் கனவுகாணுகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் 60, 000 இற்கும் மேற்பட்ட மக்களை இழந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகளை நாளாந்தம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.

பொறுமை எதுவரை?

படங்கள் தமிழ்நெற்
துணை ஆயுதக் குழுக்கள்
கிழக்கில் துணை ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. இந்த துணை ஆயுதக் குழுவொன்றை நாம் வாழைச்சேனையில் சந்திக்க நேர்ந்தது . கிழக்கில் துணை ஆயுதக் குழு இல்லை என்ற அரசாங்கத்தின் கூற்று தவறானது என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹப்ரூக் ஹொக்லண்ட் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளே போர் நிறுத்த உடன்படிக்கையை அதிகளவு மீறியுள்ளதாக தரவுகள் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும் கிழக்கில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே அதிகளவு அரசியல் படுகொலைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். நேரடிப் பேச்சுக்களின் மூலமும் இரு தரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வையும் விட்டுக்கொடுப்பையும் கட்டியெழுப்புவதன் மூலமுமே பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக பதவி வகித்து ஓய்வு பெற்றுச் செல்லும் நாளில் வழங்கிய செவ்வியிலேயே ஹக்ரூப் ஹொக்லண்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: கடந்தவாரம் கடற்படையினரின் டோறாப் படகு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உங்களது விசாரணைகளின் பெறுபேறு என்ன?
பதில்: இது மிகவும் பாரியதொரு சம்பவமாகும். மன்னாரின் தென் பகுதியில் இருந்து ஏறத்தாழ 17 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அவ்விடத்தில் எமது அதிகாரிகள் எவரும் அச்சமயம் இருக்கவில்லை. நாம் இலங்கைக் கடற்படையிடம் விசாரணை மேற்கொண்டு தகவல்களை பெற்றுள்ளோம். எப்படி இருப்பினும் இது மிக மிக ஆபத்தானது.

கேள்வி: யதார்த்த பூர்வமாக பேசினால் விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறொரு அமைப்பினால் வெடிபொருட்களுடன் கூடிய இழுவைப்படகுகள் கடலில் பயணம் செய்து கடற்படையின் டோறா படகை வெடிக்க வைக்க முடியுமென நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: இச்சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள் உள்ளார்கள் என்று கூறப்படுவதன் சாத்தியம் தொடர்பாக நாம் தீவிரமாக ஆராயந்து வருகிறோம். எனினும் அதில் மூன்றாவது தரப்பொன்றிற்கும் சம்பந்தம் உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

கேள்வி: கடந்த காலத்தில் கிழக்கில் இடம் பெற்ற பல படுகொலைகள் தொடர்பாக மூன்றாம் தரப்பொன்றின் மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது இச்சம்பவம் தொடர்பாகவும் அவ்வாறே குற்றம்சாட்டப்படுகிறது. எனவே இச்சம்பவங்களுக்கும் மூன்றாம் தரப்பொன்றிற்கும் சம்பந்தமுள்ளதை உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: இவ்விடயம் குறித்து கலந்துரையாட முடியாது. ஏனெனில் இதே போன்றதொரு கருத்தையே தென்பகுதியில் உள்ளவர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் கிழக்கில் நடைபெற்ற சகல படுகொலைகளுடனும் அம் மூன்றாந் தரப்பிற்கு தொடர்பு உண்டு. ஆனால் கடந்த வாரம் கடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆராய்கின்றபோது பல விடயங்களை நாம் மறந்து விடக்கூடாது. இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பு, இலங்கை இந்தியாவிற்கிடையில் உள்ளது. இப்பிரதேசத்தில் மீன்பிடி, சாதாரண கடற்பயணங்கள் என்பவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல சட்ட விரோதச் செயன் முறைகளும் இடம் பெற்று வருகின்றன. ஆகவே இத்தாக்குதல் சம்பவத்துடன் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு உண்டு என நான் கூறவில்லை. ஆனால் அக்கடற்பிரதேசத்தில் உள்ள குற்றவாளிகளின் செயற்பாடுகளையும் மறந்துவிட முடியாது.

கேள்வி: ஆனால் போதைப் பொருள் கடத்தற்காரர்கள் வெடி பொருட்கள் அடங்கிய இழுவைப் படகை செலுத்துவதுண்டா?
பதில்: நான் அவ்வாறு கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால் நீர் இவ்விடயத்தை ஆழமாக துருவிக் கொண்டு இருக்கின்றீர். நான் முறைப்பாடுகளை எதிர்க்கவோ, அல்லது எதிராக செயற்படவோ இல்லை. இவ்விடயத்தில் மேலும் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. அத்துடன் இந்த வகையான போக்கை நான் விரும்பவில்லை.
கேள்வி: சரி. எனினும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தவறிவிட்டதாக உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதல்லவா? பதில்: இதற்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு உள்ளது. இங்கு நிலவிவருகின்ற முரண்பாட்டிற்கு அல்லது பிரச்சினைக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காரணமல்ல என்பது யாவருக்கும் தெரியும்.

இங்கு நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு காரணம் அரசாங்கமும் விடுதலைப் புலிகளுமே. இவ்விரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாகவும் சிறப்பாகவும் கடைப்பிடிப்பதற்கு உதவி செய்வதற்காகவே நாங்கள் இங்கு உள்ளோம். எங்களுக்கு கட்டாயப்படுத்தல் கட்டளையிடுதவதற்கான எந்தவித அதிகாரமும் இல்லை. எங்களுக்கு அவ்வாறான அதிகாரம் இருப்பின், நாம் பேசும் பாணி வேறு மாதிரியிருக்கும். இரு தரப்பிற்கும் இடையிலான இணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே இப்போர் நிறுத்த ஒப்பந்தமாகும். இரு தரப்பும் இப்போர் நிறுத்தத்தை அமுல்படுத்த கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஒரு வேளை இந்த இரு தரப்பும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வராவிட்டால் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இருப்பும், அதன் செயற்பாடுகளும் அர்த்தமற்றதாகிவிடும். இதுவே யதார்த்தமான நிலையாகும்.

கேள்வி: அப்படியாயின் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளை உறுதிப்படுத்துவது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலிதாக்குவதற்கு எவ்வாறான சிபாரிசுகளை நீங்கள் முன்வைப்பீர்கள்?
பதில்: அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இருதரப்பாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இருதரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிப்பாடு மிகக் குறைவாக ஏன் பூச்சியம் என்றே கூறலாம். இந்த நேரத்திலாவது இரு தரப்பும் இதில் தமது பொறுப்பை உணர்ந்து போர் நிறுத்தத்தில் குறிப்பிடப்பட்டவற்றை கடை பிடிக்கவும் அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: சமாதானச் செயன்முறைகள் ஆரம்பத்தில் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன. ஆனால் கிழக்கில் திடீரென அரசியல் கொலைகள் இடம் பெற்றன. இப்போர் நிறுத்த மீறல்கள் எவ்வாறு ஏற்படத் தொடங்கின. பதில்: கிழக்கிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னரே இந்நிலைமை ஏற்படத்தொடங்கியது. எனது தனிப்பட்ட கருத்தின்படி அவ்வாறான பிளவு எதுவும் ஏற்படவில்லை என்பதாகும். எப்படி இருப்பினும் சூழ்நிலைகள் முன்னரைவிட தற்போது நல்ல நிலையிலேயே உள்ளது.
கேள்வி: ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிவதற்கு முன்னரே கிழக்கில் பல்வேறு அரசியற் கொலைகள் இடம்பெற்றன. மாற்று தமிழ் அரசியல் இயக்க உறுப்பினர் பலர் சுட்டுக்கொல்லப்பட்டமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை நீங்கள்தான் மறந்துவிட்டீர்கள். ஏன் நீங்கள் இரு தரப்பிற்காகவும் பேச மறுக்கின்றீர்கள்?

விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தவறான செயல்களுக்காகவும் அவர்களை நான் கண்டிக்க முடியாது. ஏனெனில் அரசின் தரப்பிலும் பிழைகள் உள்ளது. அங்குள்ள முக்கிய பிரச்சினை வட கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இராணுவம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நம்பிக்கை இல்லாததாகும். ஏனெனில் இராணுவமும் பொலிஸாரும் நீதியற்று செயற்படுவதாகவே மக்கள் கருதுகின்றனர். அப்பிரதேசத்தில் காணப்படும் யதார்த்தபூர்வமான பிரச்சினை இதுதான்.

கேள்வி: அப்படியாயின் அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வுகண்டு நிலைமையை எவ்வாறு சுமுகமாக்குவது?
பதில்: முதலில் நேரடியாகப் பேசுவது அவசியமானது. கடந்த மாதம் ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர் ந்து நடைபெறும் என நான் நம்புகின்றேன். போர்நிறுத்த ஒப்பந்தம் சம்பந்தமான விடயத்தை எடுத்துக்கொண்டால் இருதரப்பும் நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கு நாம் எம்மாலான உதவியினை செய்வோம். இச்சந்திப்பு அரசியல் விடயங்களை பேசுவதற்கானதல்ல. மாறாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த முனையும்போது எழுகின்ற நடைமுறை ரீதியிலான பிரச்சினைகளை பேசி தீர்வு காண்பதற்கான தளமாக இது இருக்கும். இருதரப்பிலும் மேல்மட்டத்திலும் கீழ்மட்டத்திலும் இந்நேரடிப் பேச்சுகள் அவசியமானது. இருதரப்பும் இதை நன்கு உணர்ந்துள்ளனர். எனவே இவ்விடயத்தில் நான் அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய தேவை இல்லை.
கேள்வி: போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாக எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு படையினரைவிட விடுதலைப் புலிகள் அதிகமாக போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றதே?

பதில்: இத்தரவுகளில் இருந்து உண்மைகளை உணர்ந்து கொள்வது ஒவ்வொரு தனிப்பட்டவரையும் பொறுத்தது. விடுதலைப் புலிகள் பாதுகாப்புத் தரப்பினரைவிட அதிகமான யுத்தநிறுத்த மீறலில் ஈடுபட்டிருப்பது என்ற தகவலில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள், சிறுவர்களை படையில் சேர்ப்பது தொடர்பானதாகவே உள்ளது. இது மிகவும் பாரதூரமான சம்பவம். ஏனெனில் இது சட்டவிரோதமானது. சிறுவர்கள் தாமாகவே படையில் இணைகிறார்கள் என்று கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஒரு நபரை கொலை செய்வது மாத்திரம் யுத்தநிறுத்த மீறலல்ல. புலிகள் தமது கொடியை ஏற்றுவதும் கூட யுத்தநிறுத்த மீறலேயாகும். எனவே சிறிய பெரிய என சகல சம்பவங்களும் யுத்த நிறுத்த மீறலாகவே கொள்ளப்படுகின்றன. எனினும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளே பதற்றத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அங்கு தோற்றுவித்ததோடு மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது.

நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ, இல்லையோ, இப்படுகொலைகள் அனைத்தும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன. அரச கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சகலவற்றிற்கும் யார் பொறுப்பு? பாதுகாப்பு படைகளே. ஆனால் இது மிகவும் சிக்கலான விடயமாகும். இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து இச்சிக்கலான விடயங்களை தீர்ப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயவேண்டும். அத்தோடு இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். கேள்வி: இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த முறை என நீங்கள் எதனை சிபாரிசு செய்கிறீர்கள்? பதில்: நேரடியான பேச்சுவார்த்தை. கீழ்மட்டத்தில் இருந்து இருதரப்பினரிடையேயும் நேரடியான பேச்சுவார்த்தைகள். பேச்சவார்த்தை கலந்துரையாடல், பிரச்சினைகளை தீர்த்தல்.

கேள்வி: கருணாவின் பிரிவிற்கும் அவரது செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பங்கு உள்ளது என குற்றஞ்சாட்டிய விடுதலைப் புலிகள் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினருடன் நேரடியாக சந்திப்பதை நிராகரித்துள்ளனரே?
பதில்: கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி கருணாவின் பிளவு இடம்பெற்றது. அதற்குப் பிறகும்கூட இரு தரப்பினருக்குமிடையில் பல சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ். இராணுவக் கட்டளையிடும் அதிகாரிக்கும் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் பிரிவு தலைவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கு பின்னரும் கீழ்மட்டத்தில் பல சந்திப்புக்கள் நடைபெற்றன. எனினும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரு தரப்பினருக்குமிடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்ட போது பாதுகாப்பு படையினரே சந்திப்பை நிராகரித்தனர்.

கேள்வி: இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகளை நீங்கள் கண்டுள்ளீர்களா?
பதில்: ஆம், இறுதியாக கடந்த மார்ச் 28 ஆம் திகதி அவர்களை நாங்கள் வாழைச்சேனைப் பகுதியில் பார்த்தோம். சாதாரண சிவில் உடையில் ஆயுதம் தாங்கியிருந்த அவர்களிடம் நாம் பேசினோம். அவர்களிடம் நீங்கள் யார் எனக் கேட்டதற்கு தாங்கள் கருணா குழுவினர் என அவர்கள் பதிலளித்தனர். அவர்களுக்கு யார் தலைமை தாங்கிச் செயற்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இங்கு எவ்வித ஆயுதக் குழுவும் செயற்படவில்லை என தென்பகுதி அரசாங்கம் தெரிவிக்கின்றது. அது முற்றிலும் தவறானது.
கேள்வி: கருணா குழுவை துணை இராணுவக் குழு என்ற வரையறையில் அடக்கலாமா? ஏனெனில் இப்போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் சார்பில் கருணா பங்குபற்றினாரே?
பதில்: அதாவது கருணா குழு துணை இராணுவக் குழு அல்ல என்று கூறுவதற்கு நீர் முயற்சிக்கின்றீர். அவர்கள் துணை இராணுவக் குழு அல்ல என நான் கூற முடியாது.

ஏனெனில், துணை இராணுவக் குழு என்ற சரத்தின் கீழ் பாதுகாப்புப் படையினரின் கீழ் செயற்படுபவர்கள் பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் செயற்படும் ஆயுதக் குழு துணை இராணுவக் குழுவாகும். எனவே, கருணா குழுவை துணை இராணுவக் குழு அல்ல எனக் கூற முடியாது. அவர்கள் சில பகுதிகளில் இயங்குகிறார்கள். பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் செயற்படுகிறார்கள். இது அவர்களை துணை இராணுவக் குழு என கூறுவதற்கு போதுமானது. எனினும், அவர்கள் துணை இராணுவக் குழுக்களா அல்லவா என்பது பிரச்சினையல்ல. இப்போது இராணுவத் தளபதி கூறுகிறார். அரச கட்டுப் பாட்டுப் பகுதியில் எவ்வித ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை என்று. ஆனால் அவரது கூற்றில் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் வருத்தத்துடன் கூற விரும்புகின்றேன். ஏனெனில் ஆயுதக் குழுவினரை நாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்டு அவர்களுடன் பேசியுள்ளோம்.

கேள்வி: இராணுவத்தினரால் இக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: இராணுவத்தினர் ஆயுதம் தாங்கியவர்கள். எனவே, அவர்களால் இதனை கட்டுப்படுத்த முடியும். அத்தோடு இவ்விடயம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஆயுதங்களை தாங்கிக் கொண்டு மக்களை கொல்வதை அனுமதிக்க முடியும் என்கிறீர்களா?

கேள்வி: இக்குழுக்களிடமிருந்து இராணுவம் ஆயுதங்களை களைவது நடைமுறைச் சாத்தியமானதா?
பதில்: அதை நீங்கள் இராணுவத் தளபதியிடம்தான் கேட்க வேண்டும். கேள்வி: நீங்கள் கடந்த நான்கு வருட காலமாக இங்கு பணியாற்றியுள்ளீர்கள். தற்போதைய நிலைமை தொடர்பான உங்கள் கருத்து என்ன?
பதில்: நாங்கள் இங்கு வந்ததற்கும், தற்போதைய நிலைமைக்கும் பாரிய வேறுபாடு உண்டு. அப்போது மக்கள் மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. 2002 செப்டெம்பரில் முதற் சுற்று பேச்சுவார்த்தையும், அதனைத் தொடர்ந்து ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. பின்னர் நிலைமை முற்றிலும் மாறியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நான் நம்புகின்றேன். நான் சந்தித்துப் பேசிய மக்கள் அனைவருமே தாம் சமாதானத்தை விரும்புவதாகவே தெரிவித்தனர்.
கேள்வி: கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்: இல்லையென்றே கருதுகின்றேன். எனினும், ஆபத்தான பாரிய சம்பவங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.
கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள சில சரத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளதே. உதாரணமாக உயர் பாதுகாப்பு வலயம் தற்போதைய சூழ்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றும் சாத்தியம் உள்ளதா?
பதில்: ஆம் என்றே நான் நிச்சயமாக சொல்வேன். ஆனால், தற்போதைய சூழ்நிலையே பிரச்சினையாக உள்ளது. இராணுவத்தினரின் பாதுகாப்பிற்காகவே உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் நன்கறிவர். ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. அரச கட்டுப்பாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக பேசும் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தொடர்பாக கேள்விகள் எழும்புவது தவிர்க்க முடியாதது. இது போர் நிறுத்த காலம். இதிலிருந்து அதிகமாக எதிர்பார்ப்பதற்கு முற்பட்டால் அது யதார்த்தமற்றதாக அமையும். தென்பகுதியிலுள்ள பேரினவாதிகள் இவ்வாறான எதிர்பார்ப்புகளையே வெளியிடுகின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என கூறுகின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது. ஏதோவொன்றிற்காக போராடும் ஓர் அமைப்பு, ஆயுதங்களை கைவிடும் முன்பு அது மிகவும் உறுதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கும்.
கேள்வி: நான்கு வருட பணியின் பின்பு நீங்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறீர்கள். நீங்கள் அதிகமாக எதிர்கொண்டது சாதகமான நிலைமைகளா அல்லது பாதகமான நிலைமைகளா?

பதில்: இரண்டு நிலைமைகளும், மாறி மாறி வந்தன. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் போர் நிறுத்தம் முடிந்து விட்டதாகவே நான் நினைத்தேன். ஜெனிவாவில் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று, சாதகமான நிலைமை ஏற்படும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

நன்றி: சண்டே ஒப்சேவர், தினக்குரல்