தமிழ்மக்கள் மீது திருமலையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலை பற்றிய மனித உரிமைகள் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான செய்தியை தமிழாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். நடுநிலை சர்வதேச ஊடகம் என்ற ரீதியில் அதன் கருத்துக்கள் முக்கியமானது.
அரசானது திருமலையில் தமிழ்மக்கள் மீது ஆயுதபாணிகளால் நடாத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளால் சிறிலங்கா அரச படைகள் மீது நடாத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை தொடர்ந்து இப்படுகொலைகள் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின்படி, கிளைமோர் தாக்குதல் நடைபெற்ற 15 நிமிடங்களுக்குள் வாள் கட்டைகள் கொண்ட 100 – 150 சிங்களவர்கள் தமிழ் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். ஏப்ரல் 12 தொடக்கம் 16 வரை நடாத்தப்பட்ட இவ்வாறான தாக்குதலில் குறைந்தது 06 பெண்கள் உட்பட 20 வரையான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 75 வரையான பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச படைகள் செயற்படாதது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவோ சிங்களவர்களாகவோ முஸ்லிம்களாகவோ யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.” என மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் குறிப்பிடுகிறார்.
இத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்ககூடிய பக்கச்சார்பற்ற சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும்படி மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறது.
நடந்துமுடிந்த தாக்குதலில் 100 வரையான வீடுகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். திருமலை வர்த்தக நிறுவனங்களின் ஒன்றியத்தின் தகவல்படி 32 வரையான வியாபார நிறுவனங்கள் சூறையாடப்பட்டோ சேதமாக்கப்பட்டோ அல்லது எரித்தோ அழிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது அப்பகுதியில் நின்ற இராணுவத்தினரும் பொலிசாரும் சுமார் 45 – 90 நிமிடம் வரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஹற்றன் நஷனல் வங்கியின் எச்சரிக்கை அலாரம் இரண்டு மணித்தியாலங்களாக ஒலித்துக்கொண்டிருந்திருந்ததாகவும் கூறப்படும் அதேவேளை இலங்கை வங்கியின் உள்ளே வருபவர்களை தடுக்கவேண்டாம் என அவ்வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு பொலிசார் கூறியிருக்கிறார்.
இத்தாக்குதல் தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் போதுமானவையல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு நாட்களாக அரசாங்கத்தால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட்டதாகவோ தமிழ்மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்ததாகவோ மனித உரிமைகள் அமைப்பு அறிந்திருக்கவில்லை.
“வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா அரசானது காத்திரமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவிடத்து இவ்வாறான இனக்கலவரங்கள் பரவக்கூடும். இத்தாக்குதல் நடைபெற்று பல நாட்கள் கடந்தநிலையிலும் மகிந்த நாஜபக்ச உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை” என பிறட் அடம்ஸ் கூறுகிறார்.
அனாமதேயமாக அடிக்கடி வந்து கருத்துக்களை எழுதும் அன்பருக்கு,
கொலைகளை யார் விரும்புவார்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் அடுத்த கன்னத்தை காட்டு என்றுதான் இயேசுபிரான் சொல்லியிருக்கிறார். (அவர் கூட கொல்ல வருபவனை என்ன செய்யவேண்டும் என சொல்லவில்லை)
புலிகளும் இராணுவத்தினரும் ஆயுதம் தாங்கியவர்கள் எதுவும் செய்யட்டும். ஆனால் அப்பாவிமக்கள் கொல்லப்படக்கூடாது.
இன்று சிங்களப்படைகள் திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கிபிர் விமானம்,பல்குழல் பீரங்கி மற்றும் டோரா படகுகள் முலம் தாக்குதல் நடாத்தியுள்ளது. கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னர் இது நடந்துள்ளது. அநேகமாக இது முழு அளவிலான போருக்கு வழிவகுக்கலாம். - சிகிரி
11 Comments:
இப்பாடலை நீங்களும் கேளுங்கள்.
நன்றி நிதர்சனம்.
By
thamillvaanan, at Tuesday, April 25, 2006 4:02:00 PM
By
Anonymous, at Tuesday, April 25, 2006 4:05:00 PM
By
Anonymous, at Tuesday, April 25, 2006 4:25:00 PM
கொலைகளை யார் விரும்புவார்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் அடுத்த கன்னத்தை காட்டு என்றுதான் இயேசுபிரான் சொல்லியிருக்கிறார். (அவர் கூட கொல்ல வருபவனை என்ன செய்யவேண்டும் என சொல்லவில்லை)
புலிகளும் இராணுவத்தினரும் ஆயுதம் தாங்கியவர்கள் எதுவும் செய்யட்டும். ஆனால் அப்பாவிமக்கள் கொல்லப்படக்கூடாது.
By
thamillvaanan, at Tuesday, April 25, 2006 4:46:00 PM
சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே...
அநாமதேயம் நீங்கள் சிங்களவரா ?
By
Anonymous, at Tuesday, April 25, 2006 5:56:00 PM
தனது சொந்த மக்கள் சாகும்போதும் கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல எழுதுகின்றார்.
கருத்துக்களை நாகரீகமாக முன்வையுங்கள்.
By
thamillvaanan, at Tuesday, April 25, 2006 6:45:00 PM
By
Anonymous, at Tuesday, April 25, 2006 7:04:00 PM
By
Anonymous, at Tuesday, April 25, 2006 7:33:00 PM
- சிகிரி
By
Anonymous, at Tuesday, April 25, 2006 7:37:00 PM
By
Anonymous, at Tuesday, April 25, 2006 9:39:00 PM
திருமலையில் எத்தனை தமிழ்மக்கள் கொல்லப்பட்டாலும் அதனைப்பற்றி இவர்கள் கதைக்கமாட்டார்கள்.
இராணுவத்தளபதி கொல்லப்பட்டால் தமிழ்மக்களின் குடியிருப்பில் குண்டைபோடுவதுதான் சிங்களவனின் திமிர்.
அதற்கு ஆதரவாக இப்படியான சிலதுகள். இவங்கள் உண்மையாகவே தமிழனாக இருக்கமாட்டார்கள்.
By
Anonymous, at Wednesday, April 26, 2006 10:20:00 AM
Post a Comment
<< Home