<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9107255?origin\x3dhttp://thamilsangamam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
  புதன்கிழமை, ஏப்ரல் 16, 2025. திருவள்ளுவராண்டு 2056.  
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்
Statcounter
To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

குடையும் குடைவும்
இலங்கைத்தீவின், சிங்களதேசத்தில் அண்மையில் நடந்த அதன் அதிபருக்கான தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஏற்பட்ட களநிலை மாற்றங்களால், அதன் சிறுபான்மை கட்சிகளின் நகர்வுகள் முக்கியமானதாகிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட கட்சிகள் படிப்படியாக சிங்கள ஆட்சிநிர்வாகத்திலிருந்து விலகதொடங்கினார்கள். ஆனாலும் இறுதிவரை மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் இறுதிவரை அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கிவிட்டது.

இதனை சமாளிக்கும் முகமாக, அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் இருந்து திரும்பிய கையோடு புலிகளின் தலைமையகம் நோக்கி விரைந்தார். இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை தோற்றுவித்து அதன் ஊடாக தமிழர்களின் பலத்தை வெளிக்காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது. இவ்வாறான விருப்பத்தை விடுதலைப்புலிகள் சமாதானபேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலகட்டத்திலே முன்வைத்த போது அதனை அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் அவ்வாறான முயற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது தனது கட்சிக்கே ஆபத்து வந்தபோது, அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் விடுதலைப்புலிகளோடு இணைந்து ஒரு கொள்கைத்திட்டத்தை முன்னெடுப்பதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால் ஆறுமுகம் தொண்டமான் எவ்வளவு துராம் தனது கொள்கையில் நேர்மையாக இருப்பார் என்பதை தற்போதைக்கு உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் சிங்களதேசத்தினால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது அவர்களை காப்பாற்ற கூடிய வலிமை விடுதலைப்புலிகளுக்கே உள்ளது என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது எங்களது கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டால் நாங்கள் விடுதலைப்புலிகளோடு இணைந்துவிடுவோம் என ஆளும்கட்சிக்கு பயம் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான பதிலை இன்னும் சில நாட்களில் அறிந்து கொள்ளலாம்.

உண்மையான இதயசுத்தியோடு இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அது மிகவும் வரவேற்புக்குரியது. இதன்படி ஏற்கனவே பல கட்சிகளை கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னனி, மலையக மக்கள் முன்னனி என்பன இணைந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாகும். ஏற்கனவே நிறுவனமயப்பட்ட பேரினவாத அரச இயந்திரத்துக்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்ககூடியதாக இருக்கும்.

இவ்வாறானதொரு கூட்டமைப்பு ஏற்பட கூடாதென்பதில் பல சக்திகள் முனைப்புடன் செயற்படுகின்றன. விடுதலைப்புலிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இதுபற்றி பேச்சுவார்த்தை நடாத்த முடிவெடுத்த நேரம், மகிந்த ராஜபக்ச அரசு அதனை தடுக்கும் விதத்தில் அதற்கு முன்னோடியாக இலங்கைதொழிலாளர் காங்கிரசுடன் பேசவிரும்பியது. ஆனால் அதனை அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தகையோடு அவ்வாறானதொரு பேச்சுவார்த்தைக்கான பணியில் சிறிலங்காவுக்கான இந்தியதூதரகம் ஈடுபட்டது. அதன் அலுவலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட அச்சந்திப்பில் நிச்சயமாக இந்தியநடுவண் அரசின் விருப்பம் புரியவைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் மகிந்தவுடன் தொண்டமானும் செல்வதற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.

யார் உண்மையான நண்பர்கள் என்பதை கண்டுகொள்ள இருவருக்கும் இன்னும் கொஞ்சகாலம் எடுக்கத்தான் போகிறது.

0 Comments:

Post a Comment

<< Home