|
நினைவுச்சின்னம்
|
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியானது எப்போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினோடு இறுக்கமான பங்களிப்பை கொண்டதாக இருக்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்தில் அப்போராட்டம் இதுவரை அடைந்த இலக்குகளுக்கு வலுச்சேர்க்ககூடியவகையில் யாழ் பல்கலைக்கழகம் செயற்பட்டு இருக்கிறது. சர்வதேச சமூகத்துக்கு தமிழரின் போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கு யாழ் பலகலைக்கழக சமூகத்தால் தொடங்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு உதவியது . அதனையிட்டு யாழ்பல்கலைக்கழக சமூகம் பெருமைகொள்கிறது" என யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனதாஸ், மாவீரர்களுக்கான நினைவுசின்னத்தை திறந்துவைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.
சிறிலங்கா படைகளால் யாழ்நகரம் 1995 இல் படையெடுப்புக்குள்ளாக்கப்பட்டபோது மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புல்டோசரால் இராணுவத்தினரால் உழுது அழிக்கப்பட்டன.அப்போது கோப்பாய் மாவீரர்துயிலும் இல்லத்;தில் மட்டும் 900 க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருந்தன. "இத்தகைய இழிசெயலை செய்த இராணுவத்தை யாழ்மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்" என அவர் மேலும் கூறினார்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசரால் அழிக்கப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு மக்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு எப்படியாவது நினைவுச்சுடர் ஏற்றவேண்டும் என்பதற்காக சென்று, நினைவுச்சுடரை ஏற்றி திரும்பிவரும்போது மேஜர் ரஜீவன் உட்பட இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மக்களால் மீளக்கட்டியெழுப்பப்பட்ட துயிலும் இல்லம்
தகவல் மற்றும் படங்கள் tamilnet
|
|
|
|