கடந்த திங்கட்கிழமை (24.10.2005) அன்று புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களால் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற எழுகதமிழ் எழுச்சிநிகழ்வின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் படங்களை காண இங்கே செல்லவும்(தமிழ்நாதம்).
எழுகதமிழ் நிகழ்வு தொடர்பான மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் அந்நிகழ்வுக்கான பாடல் ஒன்றை கேட்கவும் இங்கு செல்லவும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் பெல்ஜியத்தில் கையளிக்கப்பட்டது.
பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் கொட்டும் மழையில் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்கள் உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்தினிடையே தமிழர்கள் உரிமை முழக்கத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
பாலஸ்தீன விடுதலைப் பிரகடன காலகட்டத்தில் பாரிய பங்கு பற்றியவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியருமான பிரான்சிஸ் பாயில், தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன், சுவீடன் பேராசிரியர் பீற்றர் ஸாக், மலேசிய பேராசிரியர் இராமசாமி, யேர்மனியின் ஆல்பேர்ட் கோல் அடிகளார் ஆகியோர் பிற்பகல் 3.00 மணி அளவில் இந்த மனுவை கையளித்தனர்.
இங்கிலாந்தின் எலிசா மன், டென்மார்க்கின் மகேஸ்வரன், நோர்வேயின் யோகராஜா பாலசிங்கம் ஆகியோரும் பெல்ஜிய முழக்கப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று ஐரோப்பிய நேரம் பிற்பகல் 12 மணியளவில் இந்த உரிமை முழக்கப் போராட்டம் தொடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகம் அருகில் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பாரம்பரிய நாதஸ்வர இசை வாசிக்கப்பட்டது. பின்னர் பொதுச்சுடரினை தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது: மாவீரன் நெப்போலியனையும் அலெக்சாண்டரையும் ஒன்றிணைந்த தலைவர் அண்ணன் பிரபாகரன். நம்மை அழிக்க ஒருவார காலத்தில் இந்தப் பொடியன்களை நசுக்கிக் காட்டுகிறோம் என்ற ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டு சிங்கள இராணுவத்துக்கு துணையாக வந்த இந்திய இராணுவத்தை துரத்தியடித்தோம்.
தப்பித்தால் போதும் என்று தப்பி ஓடியது இந்திய இராணுவம். பின்னர் தமிழர்களை நசுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை சிறிலங்கா இராணுவம் நாடியது. அமெரிக்காவின் முக்கிய தளபதிகள் போர்க் களத்தில் சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். புலிப்படை இப்படித்தான் சிந்திக்கிறது- புலித் தலைவன் இப்படியெல்லாம் உத்தரவிடுகிறார் என்று கூறி பயிற்சி கொடுத்தது.
ஆனால் அமெரிக்க இராணுவத்தளபதிகளே புறமுதுகிட்டு ஓட ஆனையிறவில் வெற்றி பெற்றோம். அண்ணன் பிரபாகரன் இராணுவ ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவும் உலகத்தின் கண்களை அகல விரித்து காட்ட வைத்திருக்கிறது. வியப்பில் ஆழ்த்த வைத்திருக்கிறது. ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்.
அவரது தலைமையின் கீழ் அவர் வாழுகிற காலத்திலேயே நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்! ஐரோப்பிய ஒன்றியமே! புலிகளின் போக்குவரத்து தடையை நீக்கு! ஐரோப்பியக் கூட்டரசே! உன் செவிகளுக்கு எட்டுகிறதா? தடையை விலக்கு விலக்கு!! தமிழர் வீரம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!! என்றார் திருமாவளவன்.
இதைத் தொடர்ந்த எங்கள் மூச்சு தமிழீழமே! எங்கள் நிலம் தமிழீழமே! சூரியத் தேவன்! பிரபாகரன்! தலைவா! நாம் இருக்கிறோம் தலைவா! ஐரோப்பிய ஒன்றியமே தடையை நீக்கு!! என்ற முழக்கங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் மீண்டும் எழுப்பப்பட்டன.
பின்னர் ஜேர்மனியின் அல்பேர்ட் கோல் அடிகளார் யேர்மனிய மொழியில் ஆற்றிய உரை: 1983 ஜூலை படுகொலைகளின் போது தமிழ் மக்களை நான் கொழும்பில் பார்த்தேன். ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது லட்சக்கணக்கில் இடப்பெயர்வுக்காக ஐரோப்பிய நாட்டை நோக்கி அவர்கள் சென்றார்கள். தமிழ் மக்களின் கனவானது தமிழீழம் என்பதை நாம் நன்றாக அறிவோம். மக்கள் பட்ட நாம் கஸ்ரங்களை அறிந்துகொண்டோம்.
2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனால் தமிழ் மக்களும் நாங்களும் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் என்ன நடந்தது என்று? சமாதான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட எதையும் சிறிலங்கா அரசாங்கம் கடை பிடிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மிகக் கடுமையாக உள்ளன.
நாங்கள் இங்கிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். ஆனால் எதிர்மாறான சம்பவங்களே நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பானது ஒரு பக்கச் சார்பானது. இலங்கை இனப்பிரச்சனையில் ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த நாம் கூடியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு இனவாதத்தை வெளிப்படுத்துகிற முடிவு. ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சுதந்திரமான தமிழீழம் மலருவதை எல்லோரும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள் தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படம் மற்றும் தமிழீழச் சின்னங்களை கைகளில் ஏந்தியும் சிவப்பு மஞ்சள் உடை அணிந்தும் பங்கேற்றுள்ளனர். பல்வேறு புகலிடப் பிரதேசங்களிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் திரண்டிருப்பது ஐரோப்பியர்களின் கவனத்தை திசை திருப்பியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
5 Comments:
படங்களை பார்க்கமுடியவில்லை.
26.10.2005 அன்று 12.52 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, October 26, 2005 5:53:00 PM
தற்போது நேரடியாக தமிழ்நாதத்திலிலிருந்து படங்களுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
26.10.2005 அன்று 13.01 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, October 26, 2005 6:04:00 PM
தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி.
26.10.2005 அன்று 15.54 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, October 26, 2005 8:55:00 PM
படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி தமிழ்வாணன்.
26.10.2005 அன்று 16.33 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, October 26, 2005 9:36:00 PM
கருத்துக்களை எழுதிய Iknowu, டிஜே மற்றும் விஜி ஆகியோருக்கு நன்றிகள்.
என்றுடன் அன்புடன்
தமிழ்வாணன்
27.10.2005 அன்று 8.19 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, October 27, 2005 1:22:00 PM
Post a Comment
<< Home