|
தமிழ்ஊடக பங்களிப்பு
|
புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் ஊடகங்களுக்கான சமூகத்தின் பங்களிப்பும் என்ற விடயமாக சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று ஒட்டுமொத்தமான தமிழ் ஊடகங்களும் ( தமிழீழ புலம்பெயர் ஊடகங்களை மட்டும் கருதுகிறேன்) தமிழ் மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவுமே செயற்பட்டு கொண்டிருக்கின்றன.
புலம்பெயர் தமிழர்களின் எதிர்கால சந்ததி தமிழ் மறந்த ஒரு நிலை ஏற்பட கூடாதென்பதற்காக தமிழ்ச் சமூகம் சிந்தித்து செயற்படவேண்டும். இதற்காக செய்யக்கூடியவை என்ன? தமிழ் ஊடகங்களாக இன்று இயங்கி வரும் முக்கியமாக தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது முக்கியமானதாகும். தனியே வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற தொலைக்காட்சிகளாக தமிழீழ சார்பு தொலைக்காட்சிகள் இல்லை என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே தொலைக்காட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளை தமிழ் சமூகத்தின் பிள்ளைகளாக, தமிழ் இனம் என்ற உணர்வுடன் வளருவார்கள். தமது பிள்ளைகள் ஒழுக்கநெறியுடன் வாழவேண்டும் என கருதும் பெற்றோர் தாம் தமிழ் சமூகத்தின் அங்கம் என்பதையும் அதனை ஊட்டுவதன் மூலமும் நமது சமூகத்துக்கு ஏற்ற பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலமும் தமது நாட்டின் நிகழ்வுகளை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதன் மூலமும் தமிழர்களாக வாழுவார்கள்.
தொலைக்காட்சிகள் பார்ப்பது கூடாது என்று கூறிய காலம் போய் இப்போது இவன் என்ன தொலைக்காட்சிகளை பார்ப்பதை ஊக்குவிக்கிறானா எனவும் சிலர் எண்ணக்கூடும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
எனவே நமது புலம்பெயர் தமிழர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு என்ற ரீதியில் தொலைக்காட்சிகளையோ வானொலிகளையோ பத்திரிகைகளையோ ஊக்குவிக்கும் முகமாக அவற்றுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
இப்பதிவு பற்றிய யாழ்தளத்தில் சில பகிர்வுகள்
|
|
|
|