|
வெள்ளைப்புலியே வெளியேறு
|
என்ன நடக்கிறது ? எல்லாமே முரணுக்குள் முரண். சாமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இப்போது விஸ்வருபம் எடுத்து எங்கே சென்று முடியபோகிறது என்பதில் எல்லோருக்கும் பயம் கலந்த எதிர்பார்ப்பு. இந்தியா என்றும் அமெரிக்கா என்றும் மாறி மாறி திட்டிக்கொண்டிருந்த ஜேவிபியினர் ( இங்கு ஜேவிபி என்பது தனியே ஒரு கட்சி என்று கருதாமல் சிங்கள கடும்போக்குவாத கூட்டுகள் என்பதே பொருத்தம். சுருக்கமாக அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு அந்தப்பெயர் இந்ந ஆண்டோடு சிறப்புப்பெயராகிவிடும் )
இப்போது நோர்வேயை திட்டி தற்போது உதவி வழங்கும் நிறுவனங்கள் மீது அதனது பார்வை திரும்பியுள்ளது. உலகவங்கியின் இலங்கை வதிவிட பரதிநிதி பீற்றர் கெரால்ட் தற்போது இப்பேரினவாதிகளினால் கடும் அவமதிப்புக்குள்ளாகியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்போது அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என கோரியும் பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஜேவிபி பிரசாரசெயலாளர் விமல்வீரவன்ச வின் வழிகாட்டலில் பல சிங்கள "தேசாபிமான பிக்குகளும்" கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அவரது உருவம் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மை எரிபூட்டப்படுவதை படத்தில்காணலாம்.இவ்வாறு ஜேவிபிக்கு கடுப்பேற அவர் என்னதான் செய்தார்?
ஆறாம்திகதிய சண்டேரைம்ஸ் இதழில் நேர்காணலின்போது "நான் பல தடவைகள் சில ஊடகங்களாலும் தேசாபிமான பற்றுள்ள அமைப்பினராலும் "எரியூட்டப்பட்டு" இருக்கிறேன். அதற்கான காரணம் என்னவென்றால், உத்தியோகபூர்மற்ற ஓருமாதிரியான தனிமாநிலமாக, ஒரு அதிகாரபூர்வமான விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாட்டு பிரதேசம் இருக்கிறது என்ற அடிப்படையிலும், அரசாங்கத்துடன் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொண்ட ஒரு அமைப்பு என்ற ரீதியில் அவர்களும் சட்டரீதியான ஒரு பங்காளிகள் என்ற அடிப்படையிலும் விடுதலைப்புலிகளுடானான எமது தொடர்புகள் பொருத்தமற்றது" என அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்கு முன்னரும் ஒரு தடவை இவ்வாறு இவரது உருவபொம்மை எரிக்கப்பட்டதுதெரிந்ததே அப்போது அவர் பிபிஸிக்கு அளித்த பேட்டியில்; "என்னுடைய பொம்மையை உண்மையில் அழகாக செய்திருந்தார்கள்" என்றார்.
(கொடும்பாவி எரித்தல் என சொல்வது ஆனால் இது சரியா பிழையா என்ற குழப்பத்தில் உருவபொம்மையென குறிப்பிட்டுள்ளேன்.)
|
|
|
|