|
அடுத்த ஐநா தூதுவர்
|
சிறிலங்கா அரசு ஐநாவுக்கான அடுத்த செயலாளராக தங்களது பிரதிநிதியை நியமிப்பதற்கான அரசியல் இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாகவே சிறிலங்கா அரசுத்தரப்பு சமாதான செயலாளராக ஜயந்த தனபாலா குறிப்பிட்ட பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்செய்தி ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என நான் கருதுகிறேன்.
தற்போதைய யுத்தமற்ற சூழ்நிலையை பயன்படுத்தியும் தற்போதைய ஜயந்த தனபாலாவின் சமாதான பணிகளை சுட்டிக்காட்டியும் தமது பிரதிநிதி ஐநா செயலாளராக உருவாக்கிவிடவேண்டுமென்பதில் சிறிலங்கா அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இவ்விடயமாக உரிய கவனத்தை தமிழர் தரப்புகள் முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவின் அரசாண்மைக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிவிடும். இலங்கைத்தீவில் சிறுபான்மை இனங்கள் அதன் பெரும்பான்மை இனத்தால் அடக்கப்படுவது நியாயமாக்கப்படும். எனவே தமிழ் தரப்புகள் உரிய கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் பிரதிநிதியை ஐநாசபை பிரதிநிதியாக்கப்படுவதை தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்ககைகளை உடனடியாகவே எடுக்கப்படவேண்டும்.
தற்போது ஐநா செயலாளராகவிருக்கும் கொபிஅனானின் பதவிக்காலம் டிசம்பர்2006 உடன் முடிவடைகிறது.
யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
|
|
|
|