|
சிறுவர்களா இவர்கள் இல்லை குழந்தைகள்
|
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது.
இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்க வேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள்நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர்படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்?
கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் “ எதிர்கால பௌத்தபோதகர்களையே” இங்கு காண்கிறீர்கள்.

இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறைவாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும்.
இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர்மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.
அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராத போதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை – இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா? இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் என்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும்.
யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
|
|
|
|
4 Comments:
சிறுவர்களை குழந்தைகளை இவ்வாறு சிறைப்படுத்தும் மதம் எதுவானாலும் மீள்பார்வைக்குட்படுத்தப்படவேண்டும்.
செய்யப்படுமா?
1.44 மணிக்கு 6.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Saturday, March 05, 2005 7:47:00 PM
இப்பகுதி யாழ் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்குக.17.43 மணிக்கு 6.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Sunday, March 06, 2005 11:46:00 AM
உலகத்தில் பல மில்லியன் அப்பாவிக் குழந்தைகள் ஏகாதிபத்யத்தின் திமிர்த்தனமான சுரண்டலினால் பட்டுணிச்சாவுக்குள் தள்ளப் பட்டு மரிக்கின்ற இவ்வலகில் நாம் வாழ்கிறோம்.கடந்த பத்தாண்டுகளாக் கண்டுகொள்ளப்படாமலே கொல்லப்பட்ட ஈராக் மழலைகள் எவ்வளவு?சுமார் ஒருமில்லியன்!இன்று வரை ஈராக்கில் போடப்பட்ட யு-838 இரகக் கதிரியகக் குண்டுகள்300.000.மூன்று இலட்சம்.இதுகுறித்து விவாதிக்க முடியாத கபோதி முதலாளிய உலகமா மதப் பாசிசத்தைத் தடுக்கும்? இவையெல்லாம் மூலதனத்தின் காவலரண்கள்.இவற்றைத் தகற்பதென்பது இறைவனைத் தகப்பதென்பதில்லை.இதைப்புரியும் வரை இத்தகைய கண்ராவிகளை எந்த முறைமையாலாம் தோற்கடிக்க முடியாது.கூடவே நாம் என்ன நல்ல பேர்வழிகளோ?சிறார்களை உடலாலும் உளஆளத்தாலும் ஒடுக்கிப் பணம் பண்ணுவதில்லையோ?
தமிழர் சமுதாயத்தில் சிறார்கள் படும் வேதனை சொல்லித் தீருமா?சிங்கள பௌத்தம் இருக்கட்டும் முதலில் சிறார்களைக் காயடித்துக் கொல்லுவதை நிறுத்தி விடுதலே அவசியம்.கிட்லர் பாணியில் மக்களைக் காயடிக்கும் கூட்டம் உலகெல்லாம் ஆயுதக்கோலாச்சும் நிலையொழிய மூலதனப் பிசாசுகள் விடுமா?
ப.வி.ஸ்ரீரங்கன்
23.14 மணிக்கு 6.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Monday, March 07, 2005 3:25:00 AM
அன்பின் ப.வி.ஸ்ரீரங்கன்,
நீங்கள் குறிப்பிடும் காயடித்தல் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் ஏதோவொரு சிக்கலான பிரச்சனையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிகிறதது. எது எப்படியென்றாலும் மேற்குறித்த மதம் என்ற பெயரில் நாகரிகமான முறையில் ஒடுக்கப்படும் சிறார்களின் எதிர்காலம் சீரழிவதுடன் அதன் எதிர்வினைனயாக தூரநோக்கற்ற கடும்போக்கான ஒரு கூட்டம் மக்களை வழிகாட்டப்போகிறது மதபோதகர்கள் என்ற பெயரில்.
எனவே இவ்விடயமும் முக்கியத்துவமானது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
17.46 மணிக்கு 7.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Monday, March 07, 2005 11:58:00 AM
Post a Comment
<< Home