<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தந்தை செல்வா
எதிர்வரும் 26 ம்திகதி தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.

பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.

1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப்போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.

அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
மொரிஷியஸில் தமிழைத் தேடும் தமிழர்கள்
தமிழர்களுக்காக வெளியாகும் `தமிழ் வொய்ஸ்' பத்திரிகை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமே அச்சாகிறது

`தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று மார்தட்டி கொள்ளும் அந்தத் தமிழர்களால் தமிழ் பேச முடியவில்லை என்பது வேதனையாக இல்லையா?

கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மொரிஷியஸ் நாட்டுத் தமிழர்களின் நிலைதான் இப்படி இருக்கிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நான்கு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் மொரிஷியஸ் சென்றிருந்தார். அவருடன் சென்றபோதுதான் இந்த நிலையைக் காண முடிந்தது.

கடந்த 1820 களிலேயே மொரிஷியஸ் நாட்டுக்கு பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் தமிழர்கள், அதன் பின்தான், பிஹாரிகளும், குஜராத்தியர்களும், ஆந்திர மாநிலத்தவரும் அங்கு வரத் துவங்கினர்.

இப்படி மொரிஷியஸில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை, மொரிஷியஸ் மக்கள் தொகையான 12 இலட்சத்தில் 68 சதவீதம் (51 சதவீதம் இந்துக்கள், 17 சதவீதம் முஸ்லிம்கள்) அதில் தமிழர்கள் 6 சதவீதம் பேர். பெரும்பான்மையாக இருந்தாலும் கூட, இந்தியப் பூர்வீக மக்கள் மதம், மொழி, சாதி என்று பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றனர்.

மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள பிரெஞ்சோ- மொரிஷியர்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். 3 சதவீதமாக உள்ள சீனர்கள், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். ஆபிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கிரியோல் சமூகத்தினர் 28 சதவீதம் இருந்தாலும், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

மொரிஷியஸ் ரூபா நோட்டில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் ரூபா மதிப்பு அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தில் தமிழர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழர்களில் பெரும்பாலானவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

இங்கு ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக, கோபுரங்களுடன் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அதிகம்.

காவடி ஆட்டம், சிவராத்திரி, தீ மிதிப்பு திருவிழா, தமிழ்ப் புத்தாண்டு என எல்லா விழாக்களையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தினசரி கோயிலுக்கு செல்லும் தமிழர்கள், `தமிழில் 'பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடுகின்றனர். ஆனால், தமிழ் பேசத் தெரியாது. பிரெஞ்சு, ஹிந்தி, ஆங்கிலம் பேசுகின்றனர்.

ஹிந்தி மொழி அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில், தமிழ் மட்டும் மறைந்து போவதற்கு, தமிழர்களிடையே ஒற்றுமை உணர்வு இல்லாததும் முக்கிய காரணம். சுய ஆதாயங்களுக்காக தமிழையே காட்டிக் கொடுக்கும் நிலைக்கு சிலர் சென்றுவிட்டனர் என்று இங்குள்ள தமிழர்கள் மனம் வெதும்புகின்றனர். ஹிந்தி பேசுவோர் தங்கள் உரிமைகளைப் பெற்றுவிட்ட நிலையில், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பெரிய அளவில் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. தமிழர்களைப் பயன்படுத்தி செல்வாக்குப் பெற்றுவிட்ட ஹிந்தி பேசும் மக்கள், தற்போது தமிழர்களைக் கைவிட்டுவிட்டனர்.

இந்த நிலையில், தமிழ் கோயில்கள் சம்மேளனம் என்ற பெயரில், சுமார் 150 கோயில்களைக் கொண்ட அமைப்பு தமிழுக்காகக் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. அதில், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட தமிழ் லீக், இனிய தமிழ் ஆகிய அமைப்புகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

`பாராளுமன்றத் தேர்தல்களில், பல்வேறு கட்சிகளின் சார்பிலும் முன்பு 7-8 ஆசனங்கள் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. தற்போது நான்கு அல்லது ஐந்தாகக் குறைந்துவிட்டது. குறைந்தபட்சம் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்து வந்தது. தற்போது, இரண்டு அமைச்சர்கள்தான் உள்ளனர். அதனால், தமிழர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடத் துவங்கியிருக்கிறோம்' என்றார் தமிழ் கோயில்கள் சம்மேளனத் தலைவர் நரசிங்கம்.

`மொரிஷியஸ் தொலைக் காட்சியில் ஹிந்திக்கு இணையாக தமிழுக்கு வாய்ப்புத் தரக் கோரி 6 மாதங்களுக்கு முன் 3 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதேபோல், அரசுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு போதிய வாய்ப்புக் கேட்டுப் போராடி வருகிறோம். தமிழ் புத்தாண்டு தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்' என்றார் அவர்.

`தமிழர் என்ற பெயரைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு உரிமை உள்ளிட்ட சலுகைகளுக்காகப் போராடும் உங்களால் தமிழ் கூட பேச முடியவில்லை. தமிழ் மக்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?' என்று அவரிடம் கேட்டபோது, `இதுவரை தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான சரியான முறையைக் கடைப்பிடிக்கவில்லை. தற்போது, எந்த முறையைக் கையாண்டால் எளிதாகத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்பது குறித்து மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் மூலம் முயற்சி எடுத்து வருகிறோம்' என்றார் நரசிங்கம்.

அரசு அனுமதியளித்தால், தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை பணியில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். தமிழ் கோயில்கள் சம்மேளனமும், அரசியல் வட்டாரத்துக்கு நெருங்கியவரான பர.வேலாயுதம் தலைமையில் இயங்கும் தமிழ் கலாசார சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கின்றன. மொரிஷியஸ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு சிலர் பலியாகிவிட்டனர். ஆனால், அந்த சம்மேளனத்துடன் சேர்ந்து செயல்படவே விரும்புகிறோம்' என்றார் நரசிங்கம்.

`தமிழ் வொய்ஸ்' என்ற பெயரில் தமிழர்களுக்காக வெளியாகும் பத்திரிகை, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில்தான் அச்சாகிறது. தமிழ் இல்லை. இருந்தாலும், தமிழர்களுக்காக பல்வேறு வழிகளில் போராடுவதாகக் கூறுகிறார் அப்பத்திரிகையின் ஆசிரியர் நாயுடு.

உலக அளவில் தமிழை வளர்க்க தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் முயற்சி எடுத்தால் மொரிஷியஸில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் குற்றுயிராகக் கிடக்கும் தமிழுக்குப் புத்துயிரூட்ட முடியும் என உண்மையான தமிழ் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், மொரிஷியஸில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவ முடியும். அவர்கள் அப்படி முயற்சி எடுத்தால், அது தமிழுக்கு ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும் என்று தெரிவித்தார் போர்ட் லூயி கடற்கரை விடுதி ஒன்றில் பணியாற்றும் தேவன் ராமச்சந்திரன்.

நன்றி தினமணி.
தமிழ்ஊடக பங்களிப்பு
புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் ஊடகங்களுக்கான சமூகத்தின் பங்களிப்பும் என்ற விடயமாக சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று ஒட்டுமொத்தமான தமிழ் ஊடகங்களும் ( தமிழீழ புலம்பெயர் ஊடகங்களை மட்டும் கருதுகிறேன்) தமிழ் மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவுமே செயற்பட்டு கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் தமிழர்களின் எதிர்கால சந்ததி தமிழ் மறந்த ஒரு நிலை ஏற்பட கூடாதென்பதற்காக தமிழ்ச் சமூகம் சிந்தித்து செயற்படவேண்டும். இதற்காக செய்யக்கூடியவை என்ன? தமிழ் ஊடகங்களாக இன்று இயங்கி வரும் முக்கியமாக தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது முக்கியமானதாகும். தனியே வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற தொலைக்காட்சிகளாக தமிழீழ சார்பு தொலைக்காட்சிகள் இல்லை என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எனவே தொலைக்காட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளை தமிழ் சமூகத்தின் பிள்ளைகளாக, தமிழ் இனம் என்ற உணர்வுடன் வளருவார்கள். தமது பிள்ளைகள் ஒழுக்கநெறியுடன் வாழவேண்டும் என கருதும் பெற்றோர் தாம் தமிழ் சமூகத்தின் அங்கம் என்பதையும் அதனை ஊட்டுவதன் மூலமும் நமது சமூகத்துக்கு ஏற்ற பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலமும் தமது நாட்டின் நிகழ்வுகளை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதன் மூலமும் தமிழர்களாக வாழுவார்கள்.

தொலைக்காட்சிகள் பார்ப்பது கூடாது என்று கூறிய காலம் போய் இப்போது இவன் என்ன தொலைக்காட்சிகளை பார்ப்பதை ஊக்குவிக்கிறானா எனவும் சிலர் எண்ணக்கூடும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

எனவே நமது புலம்பெயர் தமிழர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு என்ற ரீதியில் தொலைக்காட்சிகளையோ வானொலிகளையோ பத்திரிகைகளையோ ஊக்குவிக்கும் முகமாக அவற்றுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.

இப்பதிவு பற்றிய யாழ்தளத்தில் சில பகிர்வுகள்
கருத்து சொல்ல வாங்க.
திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கான இறுதி வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. முழுநிறைவான தமிழ் உள்ளீட்டு செயலியை சாதாரண இணையப்பாவனைக்கு ஏற்றவகையிலே வடிவமைப்பதே நோக்கமாக இருந்தது.

வெளிவரும் இவ்வெழுதியில் நீங்கள் விரும்பியவாறு விரும்பிய இடங்களில் கிளிக்செய்து தட்டெழுதமுடியும்.

இதுவரை காலமும் இரண்டு கருத்துபெட்டிகள் பாவித்ததில் இருந்து தனிப்பெட்டிக்கு மாறுவதுடன். தட்டெழுதும்போதே ஆங்கில எழுத்துருக்கள் தோன்றாது தட்டெழுத முடியும்.

நான் எற்கனவே புதிய எழுத்துரு சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தேன். ஆங்கில ரோமன் ஸ்கிரிப்ரில் தட்டெழுதுபவர்கள் புதிய எழுத்துரு தேவையற்றது என கருதுவதால் தற்போது பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இலகுவாக மாறிக்கொள்ளகூடிய விதத்தில் புதிய எழுத்துரு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகளை ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கலாம்.

இக்கருத்தூட்ட செயலியை உங்கள் இணையப்பக்கத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினால் இமெயிலில் தொடர்புகொண்டால் உங்களுக்கு ஏற்றவாறு மீயுரை அனுப்பிவைக்கப்படும். சிலர் தமது கருத்து பெட்டியை பிரதான பக்கத்தில் தோன்ற செய்யவிரும்புகிறார்கள். சிலர் பொப் அப் விண்டோவில் அதனை தனியாக உருவாக்க விரும்புவார்கள். உங்கள் விருப்பத்தை குறிப்பிடுங்கள்.

கருத்துக்கள் பகுதியை கிளிக் செய்து கருத்தூட்ட பெட்டியை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.

பி.கு : ரிஸ்கி எழுத்துருவுக்கு மட்டும் தட்டெழுதிய வசனத்தின் இடையில் தட்டெழுதமுடியாது. இது எதிர்காலத்தில் தொடரும் பதிப்புகளில் நிவர்த்தி செய்யப்படலாம்.