<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

தந்தை செல்வா
எதிர்வரும் 26 ம்திகதி தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.

பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.

1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப்போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.

அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

13 Comments:

  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    தந்தை செல்வா அவர்களின் முழுமையான பதிவாக இல்லாவிட்டாலும் அவரை நினைவு கொள்ள ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் என்ற எண்ணத்துடன்

    அன்புடன்
    தமிழ்வாணன்.

    23.4.2005 அன்று 2.8 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Friday, April 22, 2005 9:10:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழன்

    நல்ல பதிவு நன்றிகள்.

    23.4.2005 அன்று 3.51 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Friday, April 22, 2005 10:53:00 PM  



  • எழுதிக்கொள்வது: Ramanan

    தந்தை செல்வாவின் புதல்வரை தெரியுமா?

    23.4.2005 அன்று 10.21 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, April 23, 2005 5:22:00 AM  



  • எழுதிக்கொள்வது: அருணன்

    1957 இல் பருத்தித்துறையலிருந்து திருகோணமலைக்கு பாதயாத்திரையாக ஊர்வலம் சென்று 1956 செல்வா மேற்கொண்ட திருமலை மாநாடும் சிங்கள தேசததுக்கு கிலேசத்தை உண்டுபண்ணியருந்தது.இதில் செல்வா தமிழருக்கு உரிமை கோரி சிங்கள தேசத்துக்கு காலகெடு வடுத்திருந்தார்.இதுவும் பண்டா செல்வா ஓப்பந்தத்துக்கு ஒரு கரணமாகும்.

    சமஷ்டித்தீர்வுக்கு அயராத பாடுபட்ட ஒரு பண்பட்ட அரசியல்வாதி.ஜி.ஜி.பொனனம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காஙகிரஸிலிருந்து இவர் பிரிந்து தமிழரசுக்கட்சியை ஆரம்பித்ததால் அரசியலில் இவரது தனிப்பட்ட ஆளுமை தெரிந்தது.

    "தந்தை செல்வாவின் போராட்டத்தை நாம் மதிக்கிறோம்.தமிழர்களின் உரிமை போராட்டத்தில் தந்தை செல்வா என்றுமே உயிருடன் வாழ்கிறார்" என்று விடுதலைப்புலகளின் முக்கியஸ்தர் யோகி ஒரு முறை கூறியிருநதமை குறிப்பிடத்தக்கது.

    இப்படி தந்தையின் சாதனைகளையும் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    அவரது நினைவுதினத்தை நினைவுகூர்ந்து வலையேற்றிய பதிவு இரத்தினச்சுருக்கமாக அவரது வாழ்ககையை விவரித்திருக்கிறது.

    பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.



    23.4.2005 அன்று 14.17 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, April 23, 2005 10:02:00 AM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    தந்தை செல்வாவின் மகன் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். அவர் என்ன செய்கிறார்? என்பது பற்றி தெரியவில்லை. அவருடைய பெயர் சந்திரகாசன். இவர் பற்றி சில சந்தேகங்கள் இலங்கைத்தமிழர்களுக்கு இருக்கின்றன.

    சந்திரகாசனின் மகள் ஒருவர் அண்மையில் வெளிவந்த படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    குடும்பபின்னனிகளை பார்க்காமல் தந்தை செல்வா நாட்டுக்கு செய்த சேவையை போற்றுவோம்.


    23.4.2005 அன்று 17.7 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, April 23, 2005 12:14:00 PM  



  • எழுதிக்கொள்வது: கவி

    தந்தை செல்வாவை பற்றிய பதிவை பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றிகள்.



    24.4.2005 அன்று 10.56 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, April 24, 2005 5:58:00 AM  



  • எழுதிக்கொள்வது: Thamilvanan

    தமிழீழ மக்களால் தமிழீழ தனியரசுதான் தமிழீழ மக்களுக்கான இறுதித்தீர்வு என்ற "வட்டுக்கோட்டை பிரகடனம்" மிகவும் முக்கியத்துவமானதாகும்.

    சிங்கள அரசுடன் பேசிபேசி ஏமாற்றமடைந்த தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி மேற்குறிப்பிட்ட பிரகடனத்தை செய்து 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்ற ஒரு முடிவு " திருமலை தீர்மானம்" என திருமலையில் மேற்கொண்டதாகவும் அறிந்திருந்தேன். அது பற்றிய தகவல்களை அறியும் ஆவலுடன்

    அன்புடன்
    தமிழ்வாணன்.

    24.4.2005 அன்று 10.58 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, April 24, 2005 6:07:00 AM  



  • எழுதிக்கொள்வது: Chandravathanaa

    தமிழ்வாணன்
    நல்ல பதிவு.

    நட்புடன்
    சந்திரவதனா

    24.4.2005 அன்று 17.42 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, April 24, 2005 8:41:00 PM  



  • எழுதிக்கொள்வது: suratha

    தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் இந்தியாவில் இலங்கை அகதிகள் நலன்களுக்கு பொறுப்பாக விடயம் தொிந்தவராக இருக்கிறாா் என நினைக்கிறேன்.

    ஆரம்ப காலங்களில் தமிழா் விடுதலைக்கூட்டணி மக்களை ஏமாற்றுகிறது தமிழீழ
    தீவிரம் மந்தம் என குற்றம் சாட்டி கூட்டணியைவிட்டு வெளியேறிய கோவைமகேசன்(சுதந்திரன் ஆசிாியா்) ஈழவாணன்(தற்போதைய பாராளமன்ற உறுப்பினரும் கலைஞா் அரசில் கட்டுக்கொத்தாக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவரும் ஆவாா்)டாக்டா் தா்மலிங்கம்(யாழ் முன்னாள் பாஉ யோகேஸவரனின் சிறிய தந்தை) மற்றும் நீங்கள் குறிப்பிடும் தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் ஆகியோரே.

    பின்னா் தமிழா் விடுதலைக்கூட்டணி மக்களால் முற்றாக நிராகாிக்கப்பட்டது வேறு கதை..

    தமிழகத்தில் ஈழ அகதிகள் விடயம் பற்றி ஏதாவது செய்தி வந்தால் அங்கு சந்திரகாசன் கருத்தும் கூடவே வரும்.

    ஏனோ தொியவில்லை அரசியலில் இப்போது அமைதியாகவே இருக்கிறாா் .எமது ஊடகங்களும் அவரை கண்டுகொள்வதில்லை.



    24.4.2005 அன்று 22.33 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Monday, April 25, 2005 1:43:00 AM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    தந்தை செல்வாவின் இப்பதிவுக்கு கருத்துகளை கூறிய அருணன் அண்ணா, சந்திரவதனா அக்கா, சுரதா அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்.

    மேலும் முகவரியற்ற நண்பர்களான தமிழன், றமணன், கவி ஆகியோருக்கும் நன்றிகள்.

    உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

    அன்புடன்
    தமிழ்வாணன்.

    25.4.2005 அன்று 9.24 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Monday, April 25, 2005 4:34:00 AM  



  • எழுதிக்கொள்வது: suratha

    திருத்தம்

    மேற்பந்தியில் குறிப்பிடப்பட்டவா் ஈழவேந்தன்
    ஈழவாணன் என்று வந்துவிட்டது.

    25.4.2005 அன்று 9.23 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Monday, April 25, 2005 12:19:00 PM  



  • எழுதிக்கொள்வது: இளைஞன்

    வணக்கம் தமிழ்வாண்.
    தந்தை செல்வா ப்றிய உங்கள் பதிவு படித்தேன். சுருக்கமாகவும் அருமையாகவும் இருந்தது. அவருடைய மகன் சந்திரகாசனின் மகள் பூங்கோதை. அவர் பற்றிய பதிவொன்று என் வலைப்பதிவில் முன்னர் இட்டிருந்தேன். அதன் இணைப்பு இதோ: http://kurumpoo.yarl.net/archives/000554.html

    நன்றி

    25.4.2005 அன்று 12.35 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Monday, April 25, 2005 3:41:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    தகவலை அறிய தந்ததுடன் கருத்துகளை கூறியமைக்கும் நன்றிகள்.

    இளைஞன் அவர்கள் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை பற்றிய பதிவு ஒன்று எழுதியிருக்கிறார்.(2004 இல் இணைப்பில் சென்று பார்க்கவும்)

    25.4.2005 அன்று 20.50 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Monday, April 25, 2005 3:54:00 PM  



Post a Comment

<< Home