காலம் கடந்த ஞானோதயம் பலருக்கு ஏற்பட்டுவருவதை இலங்கை வரலாற்றுப் போக்கில் பலரையும் காணலாம். அண்மையில் இந்த வரிசையில் இணைந்து கொண்டவர் வேறு யாரும் அல்ல. முன்னாள் சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாதான். இவர் இவ்வாறு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டபோது அரச ஆதரவு சக்திகள் "பார்த்தீர்களா இலங்கை ஜனநாயக நாடு". அது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்தவர் ஒருவரையே பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளது என்றெல்லாம் தங்களுடைய வால்பிடி அரசியலுக்கு வக்காலத்து வாங்கியதை பெரும்பாலானோர் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.தற்போது அப்போதைய பொலிஸ்மா அதிபர் சொல்வதை அவருடைய வார்த்தைகளிலே கேளுங்கள்.
" அரசமைப்புக் கவுன்ஸிலில் முக்கியமானவர்கள் மூவர் இருக்கின்றனர். அதன்தலைவர் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, அடுத்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க. இவர்களைவிட ஏனைய ஏழு உறுப்பினர் களும் எவ்வாறு அரசியல் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் அனைவரும் எனது வரலாறு, எனது செயற்பாடுகள், சேவை மூப்பு, எனது பின்னணி என அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே என்னைச் சிபாரிசு செய்தனர். அப்படி அந்தப் பத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட என்னை ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார் என்றால் அதுபற்றிக் கருத்துக்கூற என்னால் இயலவில்லை.அரசியலும், இனவாதமும் எனக்கு எதிராகச் செயற்படும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. இலங்கை என்ற நாட்டுக்காகவே நான் சேவையாற்றி இருக்கிறேன். "
"அரசமைப்புக் கவுன்ஸில் வழங்கிய சிபாரிசைத் தனியொருவர் நிராகரித்திருப்பது பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. நான் தமிழன் என்ற காரணத்தினாலேயே பொலீஸ் தலைமைப் பதவியில் நீடிப்பு வழங்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்". இவ்வாறு கூறுகிறார் கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.
இப்படித்தான் உயர்பொறுப்புகளில் இருந்த பலர் தமிழன் என்ற காரணத்தால் வரலாற்றிருந்து மறக்கடிக்கப்பட்டார்கள்.
குறிப்பு: சிறிலங்கா முதல் இராணுவதளபதியாக இருந்தவர் பொன் முத்துக்குமார் என்பவர். இவரைப்பற்றி யாரும் அறிந்திருக்கிறீர்களா?
சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?
யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
|