<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

இலங்கை இலங்குமா?

இலங்கையின் அரசியலில் தற்போது செல்வாக்கு செலுத்தும் ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் பிரமுகர் விமல் வீரவன்சவின் கருத்துக்கள் காலத்தின் தேவைகருதி இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.



விடுதலைப் புலிகளை விட பயங்கரமானவர்கள் இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் சர்வதேச ஸ்தாபனங்களும் இவர்கள் தான் இன்று. புலிகளுக்கு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்காக எமது ராஜ்யத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என ஜே.வி.பி. யின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்ற சாட்டுகிறார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாநாடு கடந்த புதன்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற போது அங்கு பேசிய போதே எம்.பி.யும் இவ்வியக்கத்தின் இணைத் தலைவருமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.



1815 ஆம் ஆண்டில் கண்டி ராஜதானியை காட்டிக் கொடுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது தான் ஹிக்கடுவை ஷ்ரீ சுமங்கல தேரர் பிரிட்டிஷ் தேசியக் கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். இது போன்ற வீரம் எமக்குத் தேவை.யுத்தத்தின் மூலம் ஆக்கிரமிக்க முடியாத கண்டி இராஜதானியை அன்று வெள்ளைக்காரன் தந்திரத்தால் ஆக்கிரமித்தான். அதற்காக ஜோன் டொய்லியை வெள்ளைக்காரன் பயன்படுத்தினான்.இந்த ஜோன் டொய்லி சிங்கள மக்களுடன் நெருங்கிப் பழகினார். வெற்றிலை போட்டார். மகாநாயக்க தேரர்களை வணங்கினான். ஷ்ரீ விக்கிரம ராஜசிங்கவுக்கு மது அருந்தக் கொடுத்தார். இது போல நெருங்கிப் பழகித்தான் கழுத்தறுக்கப்பட்டது. அதே நிலைமை இன்று தோன்றியுள்ளது.



எரிக் சொல்ஹெய்ம் இன்று மகா நாயக்க தேரர்களை சந்தித்து வணங்குகிறார். சிங்கள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். இதெல்லாம் அன்பல்ல, நஞ்சு. நோர்வே மற்றும் சர்வதேச நாடுகளின் நோக்கம் எமது இராஜ்யத்தை பலவீனமாக்குவதே ஆகும்.1505 ஆம் ஆண்டில் கடல் கொந்தளிப்பினால் போர்த்துக்கேயரான லோரன்சோ டி அல்மேதா இலங்கையை வந்தடைந்தார். இன்று கடல்கோளுக்குப் பின்னர் உதவி வழங்கும் போர்வையில் எமது நாட்டை அடிபணியச் செய்ய பலர் வந்துள்ளனர். அன்று கண்டி இராஜதானியை ஆக்கிரமித்தது போல் யுத்தத்தால் அல்ல உதவி செய்யும் போர்வையில் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, இனங்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கி பலமற்ற நாடாக எமது நாட்டை வெளிக்காட்டி அடிமைப்படுத்துவதே சர்வதேசத்தின் நோக்கம்.இதற்காகத் தான் புலிகளே மறந்து போயுள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனை, தமிழ் ஈழத்தை எல்லாம் இவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.கடல்கோளுக்கு பின்னர் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் கொபி அனான், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன், புஷ் மற்றும் ஸ்கென்டி நேவிய நாட்டு, நோர்வே நாட்டு பிரதிநிதிகள் அனைவரும் வீடு செல்லும் போது புலிகளுடன் தேசிய இணக்கப்பட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டே செல்கிறார்கள்.



அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்த, ராஜீவ் காந்தியை கொலை செய்த உலக பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்படுமாறு கோருவது ஜனநாயகமாகுமா? புஷ்-பின்லேடன் இணைந்து செயற்படுமாறு இவர்கள் கோருவார்களா புஷ் தான் அதை ஏற்பாரா?.எமது நாட்டிலுள்ள ஐ.நா. பிரதிநிதிகள் கௌசல்யனின் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இதனால் யுத்தம் மூளும் என்றும் தெரிவிக்கின்றனர். இவர்கள் யார் எமது நாட்டில் யுத்தம் வருமென ஆரூடம் கூறுவதற்கு? இந்த சர்வதேச சூழ்ச்சிக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்தி டொலர்களை வழங்கி தமிழ் ஈழத்தை ஏற்படுத்தப் பார்த்தனர். அதுவும் இத்திட்டம் 2005 இலே நிறைவேற்றப்பட விருந்தது. தமிழ் ஈழக் குழந்தை 2005 இல் பிறந்திருக்கும். ஆனால் எம்மால் அது தடுக்கப்பட்டு விட்டது.



பிரசவிக்க முடியாத தமிழ் ஈழத்தை `சீசர்' செய்தாவது வெளியில் எடுப்பதற்கு தான் இன்று அனைத்து வழிகளிலும் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் முயன்று வருகின்றன.
புலிகளும் தமிழ்ச்செல்வனும் மறந்துவிட்ட தமிழ் ஈழத்தை சர்வதேசம் தான் நினைவுபடுத்திக் கொண்டுள்ளதோடு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிக்கின்றது. அதற்காகத்தான் நிவாரணப் பணிகளை அரசாங்கம் - புலிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை கொடுக்கிறது.யுத்த நிறுத்த உடன்படிக்கையால் யுத்தம் நிறுத்தப்பட்டது வரவேற்கிறோம். ஆனால் புலிகள் பிரதேசம், இராணுவப் பிரதேசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதையே எதிர்க்கிறோம். உண்மையில் அது மீட்கப்பட்ட பகுதி, மீட்கப்படாத பகுதி என்றிருக்க வேண்டும். விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும்.அத்தோடு, புலிகளுக்கு மேஜர், ஜெனரல், கோப்ரல் என பதவிப் பெயர்களை நமது ஊடகங்களும் பாவிக்கின்றன. விசேடமாக ஆங்கில ஊடகங்கள் இதனைச் செய்கின்றனன.இங்கு வந்த ஐ.நா.செயலாளரை எவ்வாறாவது கிளிநொச்சிக்கு வரவழைக்க புலிகள் பலமுறை முயற்சித்தனர். நாம் அதனை தடுத்து விட்டோம். ஐ.தே.கட்சி ஆட்சியிலிருந்திருந்தால் போயிருப்பார். எமது அரசாங்கத்திலும் கிளிநொச்சிக்கு போகும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் கட்டுப்படுத்தியிருக்கிறோம்.



இதெல்லாம் எதற்காக, மெது மெதுவாக இராஜதந்திர அந்தஸ்தை புலிகள் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தர எடுக்கப்படும் முயற்சிகளே ஆகும்.கடல்கோள் வந்து 5-6 நாட்களாக புலிகள் காணாமல் போயிருந்தனர். பின்னர் தான் வெளியே வந்தார்கள். அரசு ஒட்சிசன் கொடுத்தது. இந்த லட்சணத்தில் தான் அரசாங்கம் எந்த உதவியையும் வடபகுதிக்கு செய்யவில்லையென்று குற்றம் சுமத்துகின்றனர்.இங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO)க்கள் நிவாரண நிதியத்தை சரிபார்க்க சர்வதேச கணக்காய்வாளர்கள் தேவை என்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்வி கேட்க அவர்கள் யார்?



உண்மையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் அதனை மில்லியன் கணக்கில் பண மோசடிகளில் ஈடுபட்டு வருமானத்தை சம்பாதிக்கின்றார்கள். மக்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையிலேயே மோசடிகளை செய்து வருகின்றனர்.பேர்க் பவுண்டேசன் என்ற அமைப்பில் ஒரு பிரதியமைச்சரும் இணைந்து செயற்படுகிறார். புலித்தேவனின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இவர்கள் தான் மாற்றுக் கொள்கை எனக் கூறப்படும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் பத்திரிகைக்கும் நிதி கொடுத்தவர்கள். மோதல் தவிர்ப்பு, சமாதானம் இசைந்து போதல் என்ற பெயர்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன. அமைச்சர்கள், ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து வாங்கி, வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொக்டேயில் வைத்து கோடிக்கணக்கான ரூபாக்களை செலவழிக்கின்றது. எதற்காக நாட்டை பிரிக்க மனச்சாட்சியை விற்று சம்பாதிக்கின்றார்கள்.



இந்த அரச சார்பற்ற நிறுவனக்காரர்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்களுக்கு மனச்சாட்சியோ, தான் ஒரு இலங்கையன் என்ற எண்ணமோ கிடையாது, இருப்பது ஒன்று தான் பணத்தை கொள்ளையடிப்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது.ஒருவர் இருக்கிறார் தேர்தல்களில் வன்முறை தடுப்பு என்ற பெயரில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனத்தில். இவர்கள் பெயரளவில் தான் இலங்கையர்கள். பணம் கோடிக் கணக்காக குவிந்துள்ளது. இவர்தான் இலங்கைக்கு நிதி கொடுக்க வேண்டாம் என்று சர்வதேசத்திற்கு தெரிவித்தவர். அரச தரப்பு உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து வழங்கி அதற்கு மேலும் வழங்கி பிரிவினைக்காக மூளைச் சலவை செய்பவர். கண்டி ராஜ்யத்தை காட்டிக் கொடுத்த ஜோன் டொய்யிலியின் வேலையை அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதற்காகத் தான் இலங்கையை பலவீனமடைந்த ராஜ்யம் என்பதை நிரூபிக்க அனைத்த வழிகளிலும் துரோகத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக எதையும் செய்பவர்கள்.



பௌத்த ராஜ்யத்தை அழித்தொழித்துவிட்டு தமிழ் கிறிஸ்தவ தமிழ் ஈழத்தை உருவாக்கவே சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன. நான் இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவில்லை. சூடானிலும் உட்புகுந்த நோர்வே அங்கும் சிலுவைப் போரை தொடக்கி வைத்து நாட்டை பிரித்து சின்னா பின்னமாக்கியது.



அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியை பெருமளவில் கிளிநொச்சிக்குத் தான் அனுப்புகிறார்கள், அரசாங்கத்திற்கு கொடுப்பதில்லை ஏன்? கிளிநொச்சிக்கு கொடுத்தால் கணக்கறிக்கையொன்றும் வெளியிடத் தோவையில்லை. இதன் மூலம் தான் பணத்தை சுருட்டலாம். அரசுக்கு வழங்கினால் கணக்கு காட்ட வேண்டுமே, சுருட்ட முடியாது. புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழக அமைப்பு இன்று பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய வாகனங்களாகும். இதன் மூலம் ஆயுதங்களும் புலிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.



ஒரு சில வெள்ளைக்காரர்களை இவர்கள் வரவழைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை வைக்கிறார்கள். நமது ஊடகவியலாளர்களும் அங்கு போகிறார்கள். வெள்ளைக்காரன் என்ன சொல்கிறான் அது தான் பொன்மொழியென்று அப்படியே எழுதுகிறான். அவனது சுய அறிவையே அடகு வைத்துவிடுகிறான். இலங்கையில் எல்லைக் கிராமங்கள் என்று ஒன்றில்லை. கடல்கோளால் அழிந்த பிரதேசங்கள் தான் எமது எல்லைக் கிராமங்களாகும். இது போன்ற கருத்தரங்குகளுக்கு சென்று அநுராதபுரத்தில் எல்லைக் கிராமங்கள் என எழுதுகிறார்கள். வெள்ளைக்காரன் சொல்வதைக் கேட்டு சமாதி அடைந்து விடுகிறார்கள். சுய புத்தியை பயன்படுத்துவதில்லை.


அம்பாறை - மட்டக்களப்பு வேலை பார்த்த கௌசல்யனுக்கு கிழக்கு மாகாண பொறுப்பாளர் என பதவி கொடுத்தவர்களும் ஊடகவியலாளர்கள் தான். ஏன் திருகோணமலை கிழக்கு மாகாணத்துடன் இல்லையா? ஏன் இதனை யோசிப்பதில்லை.
நாம் அரசுக்குள் இருக்கலாம் - வெளியில் இருக்கலாம். ஆனால், ராஜ்யத்தை பலமிழந்து விட இடமளிக்கக் கூடாது. பலத்தை பாதுகாக்க வேண்டும். புலிகளை விட பயங்கரமானவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் அமைப்புகள்.
இவர்கள் இன்று சிங்களவர்கள் மத்தியிலும் பிரிவினையை உருவாக்கி சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்கின்றனர். கத்தோலிக்க சிங்களவர்கள் - பௌத்த சிங்களவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கத் திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த வலையில் சிக்கி விடக்கூடாது.



இத்தருணத்தில் சிங்கள -பௌத்த சமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாட்டை பாதுகாப்பதும் அழிப்பதும் இவர்கள் கையில் தான் உள்ளது. சிலுவைப் போருக்கோ அல்லது முஸ்லிம்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஞானத்தை பயன்படுத்தி செயற்பட வேண்டும். அனைத்து இனங்கள் மத்தியிலும் இலங்கையன் என்ற எண்ணம் மேழௌ வேண்டும். கட்சி பேதங்களை ஒதுக்கித் தள்ளி ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் எமது ராஜ்யத்தை பலமுள்ளதாக்கலாம். இல்லாவிட்டால் சூழ்ச்சிக்காரர்கள் நமது நாட்டை பலவீனப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுத்து விடுவார்கள். இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.



பிரிவினைவாத புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் மேற்கொண்டுவரும் திட்டத்தை தோல்வியடையச் செய்ய ஒன்றுபடுவோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.



நன்றி - தினக்குரல்

0 Comments:

Post a Comment

<< Home