|
தமிழம் - புதிய எழுத்துரு
|
தமிழுக்கு ஏன் புதிய எழுத்துருதேவை என்பது சம்பந்தமாக நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். இதற்காகவே பலரைப்போல கதைத்து கதைத்து காலத்தை இழுத்தடிக்காமல் தமிழம் என்ற பெயரில் புதிய எழுத்துரு ஒன்றை பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவது என்ற முயற்சியில் அதனை திருவள்ளுவர் தமிழ் எழுதி யுடன் அறிமுகப்படுத்தினேன்.
குறிப்பிட்ட எழுத்துருமாற்றம் சம்பந்தமாக பல அறிஞர்கள் பலதடவைகளில் கூறியிருக்கிறார்கள். இது விடயமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்படியோ பல்வேறு சாட்டுகளை முன்வைத்து ஒருமுகமாக இழுத்தடித்து வருகிறார்கள்.
இன்று பெரும்பான்மையாக ஒவ்வொரு மாநிலத்தவரும் வெவ்வேறு எழுத்துரு தட்டெழுதும் முறை பயன்படுத்துகிறார்கள்.
புதிய எழுத்துரு எவற்றை கொண்டிருக்கவேண்டும்.
1. பழகிகொள்ள இலகுவாக இருக்கவேண்டும். 2. தற்போதைய நிலையில் ஆங்கில கீபோட்டில் ஆங்கில எழுத்துருவுக்கான 26 கீகளே மட்டும் அதிக பட்சம் பயன்படுத்தவேண்டும். 3. தற்போதுள்ள யுனிக்கோட்டு எழுத்துருவுக்கு ஏற்றவாறும் அது இருக்க வேண்டும்.
இந்த 03 அடிப்படைவிடயங்களை மட்டுமே எடுத்து பாருங்கள். இவற்றை பூர்த்திசெய்யகூடியவாறு ஏதாவது எழுத்துரு இருக்கிறதா? எனக்கு தெரிந்தளவில் ரிஸ்கி எனப்படும் எழுத்துரு மட்டும் 26 கீகளை மட்டும் பயன்படுத்துகிறது. ஆனால் அது ஒலிநய அடிப்படையில் எனகூறப்பட்டாலும் அதனை கற்றுக்கொள்வது புதியவர்களுககு இலகுவானதல்ல.
ஆனால் ஏதாவது எழுத்துருவில் பழகியவர்கள் புதிய எழுத்துருவுக்கு பழக்கப்படுவதென்பது எதிர்பார்க்ககூடியவிடயமல்ல. ஆனால் புதியவர்களுக்கு பயன்படககூடியவாறும் இலகுவாகவும் புதிய எழுத்துரு வேண்டும். நான் இங்கு தமிழம் எழுத்துருவுக்கான இடங்களை தீர்மானித்ததில் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் பொருத்தமான தொரு கட்டமைப்பை உருவாக்கவேண்டும். இது பற்றிய ஆராய்ச்சிகட்டுரை ஒன்றை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரித்து வருகிறேன். இதற்காக பலரின் கருத்துகளை திரட்டிவருகிறேன். உங்களது கருத்துக்களையும் அறிவியுங்கள் அல்லது அறிய தாருங்கள்.
என்றும் அனபுடன் தமிழ்வாணன்.
|
|
|
|
5 Comments:
நீங்க சொல்றது புரியவே இல்லையே.
"பழகிகொள்ள இலகுவாக இருக்கவேண்டும்." என்றால் என்ன? ஆங்கில (ரோமன் ஸ்க்ரிப்ட்) விசை அமைப்பையும் விட இலகுவானது வேறு எது? தட்டச்சுப்பொறி அமைப்பிலும்தான் விசைப்பலகைகள் இருக்கின்றனவே? நீங்கள் ஈகலப்பை, முரசு போன்ற மென்பொருட்களில் எந்த விசைப்பலகை அமைப்பைப் பயன்படுத்துகிறீர்கள்?
0.8 மணிக்கு 30.3.2001அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Tuesday, March 29, 2005 11:43:00 PM
அன்பின் கிருபா அவர்களுக்கு. ரோமன் ஸ்கிரிப்பிட்டில்; எழுதும்போது கொ என்பதற்கு க் + ஒ என தட்டெழுதுகிறோம். ஆனால் கையால் எழுதும்போது முதலில் ஒற்றைக்கொம்பை எழுதியே க வை எழுதுகிறோம். இதற்கு புணர்ச்சி விதி விளக்கம் அளிப்பது சாத்தியப்பாடானதா?
அதனை கருத்திற்கொண்டே புதிய எழுத்துருவில் முதலில் ஒற்றைக்கொம்பை தட்டெழுதி பின்னர் க வையும் பின்னர் அரவையும் தட்டெழுதி கொ வை உருவாக்ககூடியவாறு செய்திருந்தேன்.
இது சிறு உதாரணமே.
மேலும் உங்கள் கருத்துக்கு நன்றி.
17.5 மணிக்கு 30.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, March 30, 2005 1:32:00 PM
2.4.2005 அன்று 17.11 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Saturday, April 02, 2005 12:13:00 PM
2.4.2005 அன்று 18.6 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Saturday, April 02, 2005 1:07:00 PM
நன்றி தமிழ்வாணன்.
3.4.2005 அன்று 18.7 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Sunday, April 03, 2005 1:09:00 PM
Post a Comment
<< Home