|
நான் பிறந்த ஊர்
|
ஒரு ஓரமாய் அமைந்திருந்த என்னூரைப்பற்றி இப்போதும் பச்சையாய் ஞாபகங்கள் எட்டு வயது மட்டுமே பழக்கம் அதன்பின் ஐந்தோடு பத்தாக அலைந்தோம் ஒவ்வொன்றாய் தொலைந்தோம்.
சின்னவயதில் சிறகடித்த எம்மூரில் செல்லாக்காசாய் ஓடிச்செல் என வானிருந்து கட்டளை துண்டுகள்சொல்லியது.
ஆனைக்கொய்யாவும் கறுத்தகொழும்பான் மாம்பழமும் இப்போதும் என்வீட்டில் இருப்பதாய் இப்போதும் உணர்கிறேன். எல்லையில் இருந்திருந்தால் இப்போது எதிர்பார்க்கலாம் இப்படித்தான் நடக்கும் என்று. ஆனால் எங்களுர் இரண்டிற்கு இடையிலே இருந்ததால் தான் எல்லாமே நடந்தது.
முரளி பழம் இவ்வூரின் முகவரி 5 வருடத்துக்கு ஒருமுறைதான் பூக்கும் காய்க்கும். அப்போதும் அப்படித்தான் பூத்து புல்லரித்து எல்லாமே ஒருநொடியில் எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?
தமிழர்கள் என்பதாலா?
|
|
|
|