|
கண்காணிப்புக்குழு
|
நோர்வேயில் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழர்தரப்பு சாதுரியமாக தனது காய்களை நகர்த்தியிருக்கிறது. ஐரோப்பியஒன்றியம் புலிகளை தடைசெய்தநிலையில் புலிகளின் இந்த முடிவு சிலருக்கு ஆச்சரியமளிக்ககூடும். ஆனால் அந்தமுடிவு சரியானநேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. புலிகளை தடைசெய்த நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புக்குழுவில் ஈடுபடமுடியாது என்பதை நாகரிகமாக சொல்லியிருக்கிறார்கள். அதனை வன்னியிலிருந்து சொல்லியிருந்தால் புலிகள் தவறாக விளங்கப்பட்டிருக்ககூடும்.
தற்போது அடுத்த கட்டம் என்னவென்பதை புலிகள் சொல்லியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் நோர்வே மற்றும் ஐஸ்லாந்து நாட்டுபிரதிநிதிகள் மட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம். அல்லது புலிகளை தடைசெய்யாத ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறார்கள். புலிகளை தடைசெய்த நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது தேவையற்ற அசௌகரியங்களை உருவாக்கும் என்பது தெரியாததல்ல.
இதனை ஏற்கனவே சுவீடன் நாட்டைசேர்ந்த கண்காணிப்புக்குழுத்தலைவர் உணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்கு சென்று புலிகளின் தளபதிகளுடன், காவல்துறையினருடன், நீதித்துறையினருடன் சினேகபூர்வ சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன் முன்னனி நிலைகளுக்கு சென்று அவதானித்ததுடன் மக்களுடனும் சில சந்திப்புக்களை மேற்கொண்டார். எதிர்காலத்தில் இலங்கையில் எனது அமைதிப்பணி எனும் தலைப்பில் புத்தகம் எழுத அவை உதவகூடும்.
இதற்கு எதிர்மாறாக கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் நேற்றைய தினம் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து கண்காணிப்புபணியை செய்யமுடியாவிட்டால், கண்டியில் இருந்தாவது அப்பணியை செய்யவேண்டும் என கூறியிருக்கிறார். இக்கருத்தானது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் அவற்றை இப்போது தவிர்த்துவிடுகிறேன்.
புலிகளின் இம்முடிவை தொடர்ந்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைய்ம் சிறிலங்கா சனாதிபதி மகிந்தாவுக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களை மாற்றுவது பற்றியும் அவ்வாறு மாற்றம் செய்வதற்கான இடைவெளி ஆறுமாதம் வரை எடுக்கும் என்பதும் அதுவரை கண்காணிப்புபணியை இதேவிதத்தில் தொடர்வதுபற்றியும் கேட்டிருக்கிறார்கள். இருவரின் பதிலும் எப்படி இருக்கும் என்பது தற்போது எதிர்வுகூறமுடியாது.
ஆனால் தமிழர்தரப்பை பொறுத்தவரை ஓரளவுக்காவது தமிழர்தரப்பின் பாதிப்புக்களை வெளிக்கொண்டுவர கண்காணிப்புக்குழுவின் பிரசன்னம் அவசியம். அதேபோல விமானதாக்குதல்களை அரசு செய்யும்போது தாக்கப்பட்டது புலிகளின் இலக்குத்தான் என அறிக்கைவிடுவதற்கும் தற்போதைய கண்காணிப்புக்குழுத்தலைவர் தேவை.
|
|
|
|