|
திருமலை படங்கள்
|
தற்போது மகிந்த ராஜபக்சவின் பழிவாங்கும் தாக்குதல் என்ற பெயரில் நடாத்தப்பட்ட திருமலை மீதான விமானதாக்குதல் என்பது சிங்கள இனவாதத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற தாக்குதலாகும்.
சிறிலங்கா படைத்தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் யார் செய்தார்களோ நாம் அறியோம். ஆனால் அதர்மம் தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநாட்ட அவனே பிறப்பெடுப்பதாய் ஐதீகம். இத்தாக்குதல் நடாத்தப்பட்ட இடமானது சாதாரண பொதுசன நடமாட்ட பிரதேசம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களும் சாதாரண அப்பாவிபொதுமக்களும் அல்ல. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் உள்ளே, இராணுவ தலைமையகத்தின் உள்ளே நடந்திருக்கிறது.
படுகாயமடைந்த இராணுவத்தளபதி சமாதான காலத்தில் நடாத்தப்பட்ட பின்வரும் குறிப்பிடத்தக்க கொலைகளுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார். 1. பத்திரிகையாளர் நடேசன் 2. பத்திரிகையாளர் தராக்கி 3. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு 4. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் 5. மக்கள் பேரவை தலைவர் விக்கினேஸ்வரன் 6. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் கெளசல்யன்
அப்படியிருக்க, இத்தாக்குதலுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் திருமலையில் தமிழ்மக்கள்மீது தாக்குதல் ஏன்? 15 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.(தாக்குதலுக்கு உள்ளான சிறிமுருகன் பாலர் பாடசாலையை மேலுள்ள படத்தில் காணலாம்).
|
|
|
|