தமிழீழ தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூர் எனும் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த ஐந்து அப்பாவி மக்களை சிறிலங்கா படைகள் சுட்டுக்கொன்றுள்ளனர். யாழ்ப்பாண மாநகராட்சி அலுவலர் ஒருவர் உட்பட ஐந்து பொதுமக்களையும் வயலுக்கு குறுக்காக ஓடும்படி படி பணித்து, ஓடவிட்டு பின்னால் நின்று மிருக்கத்தனமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
 வயல்வெளியில் ஓடவிட்டு சுடப்பட்ட ஐந்து அப்பாவித்தமிழர்கள். அண்மையில் திருமலைலையைச் சேர்ந்த தமிழ்த்தேசப்பற்றாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். சிறிலங்கா புலனாய்வு அமைப்பினரால் திட்டமிட்டு அவர் கொலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து திருமலையில் சிங்கள காடையர்களால் நடாத்தப்பட்ட இனப்படுகொலையில் இருபதுக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு தடவையும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும்போது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இராணுவத்தினர் மீதான தாக்குதலைi கண்டிப்பதுடன் அவர்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பாராட்டுப்பத்திரம் கொடுப்பது வேதனையளிக்கிறது. எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அதனை கண்டிக்காத நாடுகளிடமிருந்து தற்போதைய நிலையில் ஈழத்தமிழ் மக்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
 தங்கள் உறவுகளை வயல்வெளியில் இழந்துதவிக்கும் உறவுகள் ஈழத்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் குறிப்பிட்ட கருத்து முக்கியமானதாகும். எந்தவொரு நியாயமான விடுதலைப்போராட்டமும் தனது இடைக்காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அப்போராட்டமானது தீர்மானகரமான இறுதி இலக்கை அண்மிக்கும்போது அவ்வாறான ஆதரவை தக்கவைத்துக் கொள்ளமுடியாது. அந்தவகையில்தான், அமெரிக்கா சார்பு நாடுகள் ஈழவிடுதலைக்கான அடிப்படையை ஏற்றுக்கொண்டபோதும், தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி வருவதை நோக்கவேண்டியிருக்கிறது. சிங்கள இனவாத அரச இயந்திரம் திருத்தப்படகூடியது என சர்வதேசம் கனவுகாணுகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் 60, 000 இற்கும் மேற்பட்ட மக்களை இழந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகளை நாளாந்தம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. பொறுமை எதுவரை? படங்கள் தமிழ்நெற்
|
4 Comments:
By
Anonymous, at Wednesday, April 19, 2006 8:26:00 PM
By
வன்னியன், at Thursday, April 20, 2006 5:25:00 AM
By
Anonymous, at Friday, April 21, 2006 6:40:00 PM
வன்னியன், கனாக்ஸ் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
அன்புடன்
தமிழ்வாணன்.
By
thamillvaanan, at Saturday, April 22, 2006 9:13:00 AM
Post a Comment
<< Home