<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

இவை படங்கள் அல்ல!
புங்குடுதீவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதையும், யுவதியின் பெரிய தாயார் கதறி அழுவதையும் இங்கு காணலாம்.



சிறிலங்கா படையினரின் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலம்



நாங்கள் நினைத்ததை செய்வோம். எவரும் எதிர்த்து குரல் கொடுக்ககூடாது என மிரட்டும் சிறிலங்கா இராணுவம்.



ஊர்வலம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்தவிரையும் இராணுவத்தினர்.



இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளான சிலர்.



படஉதவி தினக்குரல்

8 Comments:

  • எழுதிக்கொள்வது: இந்து

    Flare-up in Jaffna

    V.S. Sambandan

    COLOMBO: At least seven civilians and three soldiers were injured in violence in Sri Lanka's northern Jaffna town on Monday, the army said. There are conflicting reports on the nature of the unrest and the number of those injured. According to reports from Jaffna, Monday's tension started after a group of students from Jaffna University took out a procession demanding an end to "harassment by security forces." A clash between the protesters and the security forces resulted in troops "opening fire in the air," the army said. Jaffna town has been on the boil for the past two weeks, with an assortment of attacks and protests by a suspected LTTE front organisation. There are also reports of a "civilian militia", reportedly trained by the LTTE, operating in the northern peninsula. Redeployment of security forces from Jaffna has been a key LTTE demand.

    (http://www.hindu.com/2005/12/20/stories/2005122004951400.htm)

    இவ்வளவுதான் நடந்ததாக இந்து சொல்கிறது. உங்களை நம்புவதா, 125 வருட பாரம்பரியம் மிக்க இந்துவை நம்புவதா? யாழ் பலகலைக்கழக துணைவேந்தர் முதல் பல விரிவுரையாளர்கள், மாணவர்கள் காயமுற்றதை மாணவர்களில் ஒரு பிரிவினர் ஊர்வலம் சென்றபோது தாக்கப்பட்டதாக இந்து சொல்கிறதே! எது உண்மை!


    20.12.2005 அன்று 4.25 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Tuesday, December 20, 2005 9:29:00 AM  



  • 125 வருட பாரம்பரியமென்பதற்கும் நம்பகத்தன்மைக்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை.

    வேண்டுமானால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிபிசிக்கு அளித்த செவ்வியையாவது கேட்கலாம். இதில் 3 இராணுவத்தினர் காயமடைந்ததாக யார் சொல்லி இந்து வெளியிட்டதென்று தெரியவில்லை. இராணுவப்பேச்சாளர்கூட அதைச் சொல்லவில்லை.

    மேலும் என் வலைப்பதிவில் இதுபற்றியொரு பதிவு போட்டுள்ளேன். அதிலிருக்கும் படங்களிலொன்றில் இராணுவம் துப்பாக்கியை மாணவர்களை நோக்கி நீட்டியபடிதான் நிற்கிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தரும் மாணவர்களும் வானை நோக்கிச் சுட்டபின் தங்களைநோக்கியும் சுட்டதாகச் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் இரண்டு தொடக்கம் மூன்று மீட்டர் உயரத்துக்குள் துப்பாக்கிச் சன்னங்கள் சுவர்களில் பாய்ந்துள்ளது.

    மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாசும் தாக்கப்பட்டது தொடர்பாக நீங்கள் தந்த பத்தியில் எதையும் காணவில்லையே? பாராளுமன்ற உறுப்பினரும் அந்தக் கும்பலில் ஒருவரோ? இதே சம்பவத்தில் பேராசிரியர் பேரின்பநாதன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை.

    இப்படிச் சொல்பவர்களுக்கு 125 வருட பாரம்பரியமில்லையாதலால் (மாணவர்களுக்கு வெறும் 25 வருட பாரம்பரியம் மட்டுமேயுண்டு) இவர்கள் சொல்வதில் நம்பகத்தன்மை குறைவுதான்..

    20.12.2005 அன்று 5.00 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Blogger வன்னியன், at Tuesday, December 20, 2005 10:02:00 AM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    இந்து இதுவரை காலமும் சொல்லிவந்தது போலவே சொல்லியிருக்கிறது. இந்து தன்னுடைய "கொள்கையில்" நேர்மையாகத்தான் இருக்கிறது.

    அடக்கப்படும்போது அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் பேராசிரியர்களும் மாணவர்களும் புலிகளின் முன்னனி அமைப்புகள் என்றால்..... வாசகர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.




    20.12.2005 அன்று 7.26 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Tuesday, December 20, 2005 12:39:00 PM  



  • எழுதிக்கொள்வது: பிருந்தன்

    எழுத்தில் வந்த செய்திகளை நம்பமுடியாவிட்டால் காட்சிகளாக வந்ததை பாருங்கள் எது உண்மை என்று தெரியும், இந்துவின் நடுநிலைமையும் புரியும், செய்திகள் மக்களுக்கு உண்மையை புலப்படுத்த வேண்டும். பாரம்பரியம் இருந்து என்ன உண்மை இல்லாவிட்டால், பத்திரிகை தர்மமம்தான் என்ன?
    http://www.newstamilnet.com/index.php?subaction=showfull&id=1133607486&archive=&start_from=&ucat=1&

    20.12.2006 அன்று 10.58 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Tuesday, December 20, 2005 4:10:00 PM  



  • http://www.newstamilnet.com/index.php?subaction=showfull&id=1133607486&archive=&start_from

    By Blogger பிருந்தன், at Tuesday, December 20, 2005 4:15:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    கருத்துக்களை எழுதிய இந்து வன்னியன் பிருந்தன் ஆகியோருக்கு நன்றிகள்.

    மீண்டும் வன்முறைகள் ஆரம்பமாகிவிட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களின் வாழ்விடங்களில் அத்துமீறி படைநிலைகளை அமைத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற துயரமான நிலையே இதுவாகும்.

    ஒரு நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என நம்புவோம்.


    21.12.2005 அன்று 8.23 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Wednesday, December 21, 2005 1:32:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    பிருந்தன் உங்கள் மின்னஞ்சலை தரமுடியுமா? உங்களுடைய வலைப்பூவிலும் பின்னூட்டம் வழங்க முடியாமல் இருக்கிறது.




    21.12.2005 அன்று 8.40 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Wednesday, December 21, 2005 1:42:00 PM  



  • எழுதிக்கொள்வது: பிருந்தன்

    இப்போது முடியுமென நினைக்கிறேன்.

    22.12.2006 அன்று 2.45 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Thursday, December 22, 2005 7:47:00 AM  



Post a Comment

<< Home