<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

இவரா அவர்!!
தமிழ் சிங்கள உறவுகள் படிப்படியாக சீர்குலைந்துகொண்டிருந்த காலப்பகுதி. 1954 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், வல்லிபுரம் பார்வதி அவர்களுக்கும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இளைய மகனாக பிரபாகரன் பிறந்தார். பிரபாகரனின் தாயார் ஆழமான கடவுள் பக்தியுடையவராகவும் தனது இளைய புதல்வனில் அளவு கடந்த பாசம் உடையவராகவும் இருந்தார். பிரபாகரனின் தந்தையார் தனது இரண்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளும் மிகவும் நல்ல பண்புகள் உள்ளவர்களாக வளரவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார்.

பிரபாகரனின் தந்தையார் நிலஅளவையாளராக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அடிக்கடி இடமாற்றங்கள் வந்துகொண்டிருக்கும். அதன்காரணமாக அவருக்கு இடமாற்றம் கிடைக்கும்போது "துரை" என அவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரபாகரனும் அவர் செல்லவேண்டிய இடமெல்லாம் செல்லவேண்டியிருந்தது. அவ்வாறு கிழக்கு மாகாணத்துக்கு அவரது தந்தையார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்காரணமாக, பிரபாகரனின் முதல் இரண்டாண்டு கல்வியை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கற்றார். பின்னர் மீண்டும் வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம் கிடைத்தபோது, வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் பிரபாகரன் தனது கல்வியை தொடர்ந்தார். பிரபாகரன் தனது ஏழாவது வருட கல்வியை அங்கு நிறைவு செய்தபோது, மீண்டும் அவரது தந்தைக்கு வவுனியாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. வவுனியாவுக்கு சென்று தனது கல்வியை தொடர்ந்தார். அடிக்கடி இடமாற்றங்களை பெற்று செல்லும்போதும், தனது இளையமகனை தன்னுடனே எப்போதும் கூட்டிச்செல்வார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் மேலதிக கல்வி கற்பிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரையும் அவர் ஒழுங்கு செய்துவிடுவார்.

சமயவைபவங்களின்போது பிரபாகரன் எப்போதும் சுறுசுறுப்பாக தனது குடும்பத்தினருக்கு உதவிசெய்து கொண்டிருப்பார். அயலவர்களும் உறவினர்களும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு பிரபாகரன் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். பிரபாகரன், பாட்டானாரின் நினைவு நாட்களின் போது ஆர்வத்துடன் அக்கறையுடனும் ஓடியாடி வேலை செய்துசெய்துகொண்டிருப்பார். அன்றையதினம் வருகைதரமுடியாத உறவினர்களுக்காக பிரபாகரன் உணவுகளை எடுத்துச்செல்வார் என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூருகிறார்.

வல்வெட்டித்துறையானது 10000 ஆயிரம் தமிழர்களை கொண்டதாகவும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தையும் மூன்று இந்து ஆலயங்களையும் கொண்டதாகவும் இருந்தது. அவற்றில் ஒரு இந்து ஆலயம் அவர்களது குடும்பத்தினரின் கோவிலாகும். அங்கு நடைபெறும் அனைத்து முக்கிய விழாக்களின்போதும் பிரபாகரன் பங்குபற்றி ஏதாவது உதவிசெய்து கொண்டிருப்பார். பிரபாகரனின் குடும்பத்தவரைப் போலவே பிரபாகரனும் மிகவும் ஆழமான கடவுள் பக்தியுடையவராக இருந்தார். பிரபாகரனின் விருப்பத்துக்குரிய கடவுளாக முருகன் இருந்தார். சிங்கள பேரினவாதக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தன.

பிரபாகரனின் தந்தையார் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தார். அவர் எப்போதும் கூர்மையடைந்துவரும் தமிழ், சிங்கள இன முரண்பாடுகளைப் பற்றி தனது நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருப்பார். இவ்விவாதங்கள் அனேகமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். பிரபாகரனால் அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியாவிட்டாலும், பிரபாகரன் எப்போதும் அவ்விவாதங்களின்போது அமைதியாக பிரசன்னமாக இருப்பார். இதன் மூலமாக தமிழ் சிங்கள அரசியல் முரண்பாடுகளை பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வாறான பிரபாகரனின் பண்பே தற்போதும் எவருடைய கருத்தையும் பொறுமையாக கேட்டறியும் குணவியல்புக்கு அடிப்படையாக இருக்கலாம்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியத் தலைவர்கள் மீது அனைத்து ஈழத்தமிழர்களும் மதிப்பும் பற்றும் வைத்திருந்தனர். இந்திய சுதந்திர தினங்களின்போது பத்திரிகைகள் அனைத்தும் ஆர்வத்துடன் இந்தியா பற்றியும் இந்தியத் தலைவர்களைப் பற்றியும் செய்திகளைத் தாங்கிவரும். மகாத்மா காந்தி, நேரு, சுவாமி விவேகானந்தா மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் பெரும்பாலான வீடுகளில் தொங்கிக்கொண்டிருக்கும். பிரபாகரன் இரண்டு இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டார். சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகத்சிங் ஆகியோரே அவர்கள். சுபாஸ் சந்திரபோசின் சுலோகமான " எனது இறுதி இரத்தத்துளி சிந்தப்படும்வரை நான் எனது மண்ணின் சுதந்திரத்துக்காகப் போராடுவேன்" என்ற வார்தைகள் பிரபாகரனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நெபபோலியனின் படையெடுப்புகளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளையும், மகாபாரதக் கதைகளையும், கிருபானந்தவாரியாரின் சமயச்சொற்பொழிவுகளையும் விரும்பி அறிந்துகொள்ளும் ஒருவராக பிரபாகரன் இருந்தார்.

இதுபற்றிய அரசியல் கூட்டங்கள் நடந்தபோது அவற்றுக்குச் சென்று அப்போதைய நிலைமைகளைப் பிரபாகரன் அறிந்து கொண்டார். அவரது வீட்டிலும் அவரது தந்தையாரும் உறவினர்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுரங்களை உறுதிப்படுத்துவது போலவே கதைத்தார்கள்.
ஒருநாள் பிரபாகரன் ஒரு செய்தி அறிந்தார். பாணந்துறையில் உள்ள இந்துக்குருக்கள் ஒருவர் சிங்களக் காடையரால் பிடிக்கப்பட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியே அதுவாகும். "நாங்கள் சமய நெறிப்படி வாழ்பவர்கள். சமய நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு உயர்நிலையில் வைத்து மதிக்கப்படவேண்டிய குருக்களையே உயிருடன் தீமூட்டி எரிக்கிறார்கள் என்றால், நாங்கள் ஏன் அவர்களை திருப்பித்தாக்கக்கூடாது?" என பிரபாகரன் கேட்டார்.

எம்.ஆர், நாராயணன் சுவாமி அவர்களால் எழுதப்பட்ட TIGERS OF LANKA என்ற நூலில் இடம் பெற்ற ஒரு சிறு பதிவே இதுவாகும்.

4 Comments:

Post a Comment

<< Home