|
தமிழீழதேசியப்பண்
|
எதிர்வரும் மாவீரர்தினத்திற்கு முன்னதாக தமிழீழதேசியப்பண்ணை உருவாக்கும் அரும்பெரும் முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ்மக்களுக்கும் விடுதலைப்புலிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேசியக்கொடியும், தேசிய மலரும் உத்தியோகபூர்வமாக பாவனையில் உள்ள நிலையில் தற்போது தேசியப்பண்ணை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வேண்டுகோள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு:
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.
அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.
தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.
எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.
இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் 27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com தொலைபேசி: +94 21 228 5010 தொலைநகல்: +94 21 228 3941
தகவல் உதவி புதினம்
|
|
|
|
9 Comments:
நன்றி தகவலுக்கு..
31.10.2005 அன்று 19.17 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Tuesday, November 01, 2005 12:20:00 AM
PATHIVUKKU VAAZTTHUKKAL YAR ANTHA DESIYAKAVI ?!
1.11.2005 அன்று 20.06 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, November 02, 2005 1:24:00 AM
நீங்கள் யார் அந்த தேசியகவி என கேட்டிருந்தீர்கள். தேசியகீதத்தை உருவாக்கபோகின்ற கவிஞர் யார் என்பதைத்தான் குறிப்பிட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
கார்த்திகை இருபத்தேழில் பதில் வரும் என நம்புகிறேன்.
அன்புடன் தமிழ்வாணன்
2.11.2005 அன்று 12.30 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, November 02, 2005 5:36:00 PM
என்னைப்பொறுத்தவரை ஏறுதுபாா் கொடி ஏறுதுபாா் என்ற பாடலே அனைத்து அம்சங்களும் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
புதிதாக இன்னொரு பண் தேவை எதற்கு என்று புரியவில்லை.
அப்படி இன்னொன்று அமைவதாக இருந்தாலும் அது தாயக கவிஞா்களின் உணா்வில் கலந்ததாக இருந்து வந்தால்தான் அந்தப் பாடலில் உயிா்ப்பு இருக்கும்.
அவா்கள்தானே இழப்பையும் உயிா்ப்பையும் அனுபவித்தவா்கள்.
2.11.2005 அன்று 13.36 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Wednesday, November 02, 2005 6:44:00 PM
கருத்துக்களை எழுதிய விஜி, அப்துல்லா மற்றும் சுரதா அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்.
அன்பின் சுரதா அண்ணா நீங்கள் குறிப்பிடுவது போல ஏறுது பார் கொடி ஏறுது பார் .... பாடல் முற்றுமுழுதாக தேசியக்கொடியை பற்றியே கூறுகிற பாடல். ஆனால் தேசியப்பண் எனும்போதும் அது நாட்டைபற்றியும் அதன் அம்சங்களையும் குறிப்பிடக்கூடியதாக இருக்கவேண்டும் என கருதியிருக்கலாம்.
ஆனால் தேசியகொடி, காவல்துறை, நீதிநிர்வாகம், வைப்பகம் என பல்வேறு கட்டுமானங்களையும் தேசிய அடிப்படைகளையும் நிறுவிய போராளிகள் தேசியபண் உருவாக்குவதில் காலஅவகாசம் எடுத்துகொண்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பாடலை இதுநாள்வரை கொடிப்பாடல் என்றே அழைத்து வருகிறார்கள்.
எனவே தேசியப்பண்ணுக்குரிய அம்சங்களை உள்ளடக்கியதாக தேசியப்பண் வெளிவரவேண்டும். காத்திருப்போம்.
குறிப்பு: சுரதா அண்ணா நீங்கள் தட்டெழுதும்போது ர் என தட்டெழுதுவதற்கு பாமினி தட்டெழுதும் முறையில் "h" ம் ";" தட்டுகிறீர்கள். ஆனால் நான் "u" ம் ";" தட்டெழுதுகிறேன்.
அன்புடன்
தமிழ்வாணன்
3.11.2005 அன்று 12.05 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, November 03, 2005 5:31:00 PM
தேசியகீதம் எனப்படுவது 20 - 25 நாட்களுக்குள் யோசித்து எழுதப்படுவதல்ல. பல நாட்கள் புழங்கி வரப்பட்டிருக்க வேண்டும். மரியாதைக்குரிய கவிஞரால் பாடப்பட்டிருக்க வேண்டும். யாரோ ஒருவராலல்ல. எனக்கென்னவோ இதை ஏற்கனவே தேர்வு செய்து விட்டு கண்துடைப்பாக இப்போது அறிவித்து உள்ளனர் என்றே தோன்றுகிறது.
4.11.2005 அன்று 7.35 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, November 04, 2005 12:45:00 PM
//குறிப்பு: சுரதா அண்ணா நீங்கள் தட்டெழுதும்போது ர் என தட்டெழுதுவதற்கு பாமினி தட்டெழுதும் முறையில் "h" ம் ";" தட்டுகிறீர்கள். ஆனால் நான் "u" ம் ";" தட்டெழுதுகிறேன். //
உண்மைதான் தமிழ்வாணன் ஆனால் நானும் நான் அறிந்த பலரும் கால் போட்டு குத்திடுவதையே ர் க்கு வழக்கமாக்கியுள்ளோம்.ர போட்டு குத்திடும் முறையும் சாி என நினைக்கிறேன்.
இலக்கணத்தில் உங்கள் முறைதான் சாியாகும்
//yaaro//எனக்கென்னவோ இதை ஏற்கனவே தேர்வு செய்து விட்டு கண்துடைப்பாக இப்போது அறிவித்து உள்ளனர் என்றே தோன்றுகிறது.
நீங்கள் கூறிய முற்பகுதியில் எனக்கும் உடன்பாடே ஆனால் கண்துடைப்பு வேலையெல்லாம் புலிகளுக்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.
4.11.2005 அன்று 9.52 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, November 04, 2005 3:00:00 PM
குறுகிய கால அவகாசம் எனபது ஒரு தேசியபண் உருவாக்கத்துக்கு போதுமானதல்ல என்பது சரியானதே.
அதேவேளை தாயக கவிஞர்கள் தான் உருவாக்கவேண்டும் என்பது சரியல்ல. தாயக கவிஞர்களால் உருவாக்கமுடிந்தால் நல்லது. ஆனால் தாயக கவிஞர்களுக்கு இணையானளவு விடுதலைப்போராட்டத்துக்கு பங்களித்தவர்களும் தாயகத்துக்கு வெளியில் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே இங்கு படைப்புத்தான் முக்கியம். அதன் உயிர்துடிப்புத்தான் முக்கியம்.
அது கவிஞர்களால் முடியும். எங்கிருந்தாலும்.
கண்துடைப்பா? அவர்கள் எதிரிக்கு ஏமாற்றுக்காரர்களாகவும், போக்கு காட்டுபவர்களாகவும், எப்படி எப்படியோ எல்லாம் இருந்திருக்கிறார்கள். ஆனால் சொந்த மக்களிடத்தில் ஒருபோதும் அப்படி இருந்ததாக நான் அறியவில்லை.
அன்புடன்
தமிழ்வாணன்
4.11.2005 அன்று 10.26 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, November 04, 2005 3:46:00 PM
எதற்பு தேசியப் பண்? இது புலிகளுக்கு எதிராக எழுதுவதாக நினைக்க கூடாது. ஆனால் இந்த அறிவிப்பு முற்று முழுதாக புலத்து மக்களிடம் ஒரு பரபரப்பை உண்டு பண்ணுவதனூடாக நிதியுதவி பெறுவதற்கான அணுகுமுறை.
இப்பொழுதே.. புலிகள் தமிழீழத்தை பிரகடனத்தை செய்யப் போகிறார்களா என்னும் கருத்து புலத்தமிழர்களிடம் ஏற்பட்டு விட்டது. இந்த எண்ணம் புலிகளுக்கான நிதியுதவியை ஊக்கப்படுத்தும்.
4.11.2005 அன்று 12.11 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, November 04, 2005 5:16:00 PM
Post a Comment
<< Home