இந்தியாவுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பானது தனியே ஒரு சில மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மாறாக அதுவொரு நெருங்கிய உறவுநிலையின் பிணைப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் ஏற்பட்டபோது கூட தாங்கள் இந்தியர்கள் என்ற நிலைக்கு அப்பாலிருந்து ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தலைவர்களும் தமிழக மக்களும் ஆதரவாக இருந்தார்கள். இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தை வரவேற்க கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்றிருக்கவில்லை. அதேநேரத்தில் ஈழத்தில் காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவவசதிகளுகம் இன்னும் பல வசதிகளும் அந்த போர்நேரத்திலும் இருக்கவே செய்தன.
இந்திய-தமிழீழ யுத்தத்தை உருவாக்குவதில் பெரிதும் காரணியான ஜேஎன் டிக்சிற் அவர்கள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியப்படையினரின் முகாமுக்கு வந்திருந்த பிரபாகரன் அவர்களை உள்ளடக்கிய குழுவினரை சுட்டுக்கொல்லும்படி இந்திய இராணுவத்தளபதிகளுக்கு கூறினாராம். ஒரு இராஜதந்திரபணியில் ஈடுபட்ட டிக்சிற்றே கொடுமையான உத்தரவை பிறப்பித்தபோதும் அந்த இந்திய தளபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கான பிரதான காரணம், அந்த இந்திய தளபதிகள் புலிகள்மேல் வைத்திருந்த தனிப்பட்ட அபிமானமாகும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் எந்த இராணுவ தளபதியும் அவருக்கு இராணுவ மரியாதை செலுத்த தவறுவதில்லை. அதேபோல விடுதலைப்புலிகளின் தளபதிகளோடும் நல்ல உறவுநிலையே பேணினார்கள். இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.
அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு?
தியாகி திலீபன் நீர் கூட அருந்தாது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரதம் இருந்தார். மிகவும் அடிப்படையான மனிதாபிமான அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை மக்கள்முன் வழங்க ஜேஎன் டிக்சிற் மறுத்தார். அதன்விளைவாக தியாகி திலீபன் தியாகமரணமடைந்தார். பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் சிங்கள படைகளால் கைதுசெய்யப்பட்டபோது அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டிய இந்திய அரசு சிங்கள அரசின் கடுமையான நிலைப்பாட்டால் பின்வாங்கியது. பன்னிரண்டு புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு இந்திய உளவுத்துறை புலிகளை அழிப்பதற்காக புலி எதிர்ப்பு இயக்கங்களை வளர்க்க தொடங்கியிருந்தது. இதனை அப்போதைய இந்திய தளபதிகள் நன்கு அறிந்திருந்தார்கள்.
இந்திய இராணுவத்தினரும் அவரகளின் தளபதிகளும் இன்னொரு யுத்தம் ஏற்படும் என நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறை இந்திய பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஒரு யுத்தநிநையை ஏற்படுத்தியது. அதேவேளை இந்திய நடுவண் அரசின் ராஜதந்திரிகளின் அண்ணன் நிலை மனோபாவத்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டன.
தனிமனித உறவுகளும் தனித்தேசியஇனத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளும் வெவ்வேறானவை. ஒரு தேசிய இனத்தின் விருப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் இருக்கவேண்டும். ஒரு சுதந்திரபோராட்டத்தை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தித்திருக்க வேண்டும். அப்போது இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை இந்திய- தமிழீழ யுத்தத்தை உருவாக்கியது. அயல்நாட்டுக்கு சென்று போரில் ஈடுபட்டால் ஏற்பட்படப்போகும் பின்விளைவுகளை ராஜீவ் காந்தி நிச்சயம் புரிந்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே அங்கு நடந்த கொலைகள் கற்பழிப்புக்கள் அனைத்துக்கும் இந்திய அரச நிர்வாகம்தான் பொறுப்பெடுக்கவேண்டும்.
இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அவலங்களை நேரடியாக அனுபவித்தவன் என்றாலும் அதற்காக அந்த இராணுவத்தினரை குற்றம் சாட்டுவதற்கு அப்பால் அதன் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையை குற்றம்சாட்டுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு பாதுகாப்புக்காக அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்த அவர்களை கொலைகாரர்களாகவும் கொடூரமானவர்களாகவும் மாற்றியது இந்திய அரச நிர்வாகமே.ஓரு போரில் ஓரிரண்டு சம்பவங்கள் நடந்தால் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டலாம். ஆனால் ஒரு மாபெரும் மனித அவலம் நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களே குற்றவாளிகள் ஆகிறார்கள்.
பேச்சுவார்த்தையின்போது தங்களுடன் இணக்கத்துக்கு வராதபோது அதனால் கொதிப்படைந்த இந்திய ராஜதந்திரியால், பேச்சுவார்த்தையின் போதே பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க முடியுமென்றால் அதன் பின்புலத்தில் அப்போதைய இந்திய அரசின் அணுகுமுறையை பார்ப்பதே அதன் தொடர்நிகழ்வுகளின் சரிபிழைகளை ஆராய்வதற்கு பொருத்தமாக இருக்கும்
தாங்கள் எங்கே தவறு விட்டிருக்கிறோம் என்பதை புலிகளும் இந்தியாவும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வாறு பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு முன்னோக்கி செல்வது என்பதுவே இரண்டு தரப்புக்கும் உள்ள தற்போதைய இறுகிப்போன நிலையாகும். எப்படியிருந்தபோதும் பழையவற்றை களைந்து புதியவற்றை ஏற்றுக்கொள்வதே ஆரோக்கியமான உறவுநிறையை ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கும் புலிகளுக்கும் உள்ள இடைநிலையாக இருக்கமுடியும்.
கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பு இவ்விடயம் சம்பந்தமான பலரது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது. STANDBY="Loading Windows Media Player components..." TYPE="application/x-oleobject"> WIDTH="320" HEIGHT="290" ShowControls="1" ShowStatusBar="1" ShowDisplay="0" autostart="1">
இன்னும் சில இணைப்புக்கள்:
http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3.html
http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3-1.html
http://www.ibnlive.com/news/recruited-by-raw-trained-by-army-ltte/14462-3-1.html
http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm
|