|
செஞ்சோலை
|
செஞ்சோலை வளாகம். இது பல ஆண்டுகளாக தாய் தந்தைகளை இழந்த குழந்தைகளின் காப்பகமாக செயற்பட்டு வருகிறது. கடல் தாக்குதல் ஒன்றின் போது வீரச்சாவடைந்த கடற்கரும்புலி காந்தரூபன் என்பவரின் இறுதி வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டு நேரடியாக அவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் காப்பகமே அதுவாகும்.
இக்காப்பகமானது ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக இரண்டு வளாககங்களை கொண்டு இயங்கிவருகிறது. இங்கு இருக்கின்ற குழந்தைகள் போருக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற பொய்யான பிரச்சாரங்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதும், அவ் வளாகங்களுக்கு நேரடியாக சர்வதேச தொண்டு அமைப்புக்கள் சென்று, அங்குள்ள உண்மை நிலையை உணர்ந்து பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

செஞ்சோலை வளாகத்தில் கருகிய மொட்டுக்கள். அனைவரின் முகங்களை காண படத்தின் மேல் அழுத்துங்கள் கடந்த சமாதான காலத்தில் தாயகத்துக்கு சென்ற ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் அக் குழந்தைகள் காப்பகத்துக்கு செல்லாமல் திரும்பியிருக்க மாட்டார்கள். கடந்த சமாதான காலத்தோடு அக்குழந்தைகள் காப்பகம் கிளிநொச்சி பகுதிக்கு தனது வளாகத்தை மாற்றி கொண்டது.
இவ்வாறு செஞ்சோலை பிள்ளைகள் வாழ்ந்த அந்த முன்னைய வளாகமானது பாடசாலை மாணவர்களின் வாழ்வாதார கல்வி பட்டறைகளை நடாத்த கூடிய வசதியை கொண்டிருந்தது. மாணவர்களை(அதுவும் மாணவிகளை) இரண்டு நாள் தங்கவைத்து பட்டறைகளை நடாத்தக் கூடிய வசதிகளை கொண்ட எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் தான் வன்னி பிரதேசம் இருக்கிறது. சாதாரண பாடசாலைகளில் மாணவர்கள் தங்கி கல்வி கற்க கூடிய எந்த வசதிகளும் இல்லை. இதனால் கிளிநொச்சி மாவட்ட கல்வி திணைக்களத்தால் செஞ்சோலை வளாகம் அதற்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டது.
அவ்வளாகத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்குள் பல்வேறு தொண்டு அமைப்புக்களின் காப்பகங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகமும் உள்ளடங்கும்.
இவ்வளாகம் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டும் 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.
செஞ்சோலை வளாகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் நாங்கள் திட்டமிட்டுத்தான் தாக்கினோம் என வீராப்பு பேசி நிற்கும் சிங்கள அரசின் திட்டம் என்ன? தமிழ்ச் சந்ததிகளையே அழிப்பதோடு அல்லாமல் புலிகளின் கோபத்தை சீண்டி நிற்கும் அரசுக்கு தமிழர்கள் வழங்கப்போகும் பதில் என்ன?
படங்கள்: நிதர்சனம்
தொடர்புடைய சுட்டிகள் தென்செய்தி புதினம்
|
|
|
|
3 Comments:
தம்பியின் விழி நீருக்குப் பதில் கிடைக்கும். தமிழீழமாய். பதிவுக்கு நன்றி.
- நிலவன்.
By
Anonymous, at Monday, August 21, 2006 5:00:00 PM
By
கானா பிரபா, at Tuesday, August 22, 2006 4:28:00 PM
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தலைவர் பிரபாகரன் அவர்கள் மகிந்த ராஜபக்சவை ஒரு யதார்த்தவாதி என நம்பினார். ராஜபக்ச சிங்களவர்களுக்கு என்றாலும் நல்ல தலைவராக இருப்பார் என தலைவர் கருதினார். ஆனால் கொடிய அரக்கனாகவே மகிந்த இருக்கிறார். இப்படி சிறுவர்களை கொன்றபின்னரும் தாங்கள் நன்றாக திட்டம் போட்டுத்தான் அத்தாக்குதலை செய்ததாக சொல்கிறார்கள். எப்படி ஆறுதல் அடைய முடியும்.
By
thamillvaanan, at Wednesday, August 23, 2006 3:35:00 PM
Post a Comment
<< Home