<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9107255?origin\x3dhttp://thamilsangamam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
  புதன்கிழமை, ஏப்ரல் 2, 2025. திருவள்ளுவராண்டு 2056.  
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்
Statcounter
To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

பயங்கரவாதி மகிந்த
திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. French charity Action Against Hunger என்ற அமைப்பின் தொண்டர்களே வரிசையாக முழங்காலில் நிற்கவைத்து அவர்களது அலுவலகத்துக்குள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.


சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக் கொண்டிருந்திருக்கும். இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித அவலங்களுக்கு இதே கண்காணிப்புக்குழுவும் ஏதோ ஒரு விதத்தில் உள்ளடங்குகிறார்கள் என்பது கவலையளிக்கின்ற விடயமாகும்.


இத் தொண்டு அமைப்புக்களின் உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையும் உரியமுறையில் இந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவால் வெளிப்படுத்தப்படவில்லை. இன்னும் சில காலம் சென்ற பின்னர், செஞ்கோலை படுகொலையின் உண்மைநிலையை (இவர்கள்) வெளிப்படுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது?

எப்படி இருந்தபோதும் தற்போது என்றாலும் சிங்கள அரசின் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்களை கொன்றதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் வன்னி மண்ணில் நடந்த கிளைமோர் தாக்குதல்களையும் வெளிப்படையாக கண்டித்திருப்பதுடன் சிங்கள அரசு மீது குற்றம் சாட்டியுள்ளமை ஆறுதல் அடையகூடியதாக இருக்கிறது.

இவ்வாரம் இந்தியன் ருடே சஞ்சிகைக்கு பேட்டி அளித்த மகிந்த ராஜபக்சவிடம் செஞ்கோலை படுகொலை தொடர்பாக கேட்கப்பட்டபோது “கொல்லப்பட்டவர்கள் சேட்டும் ரவுசரும் அணிந்திருந்ததாகவும் அதனாலேயே கொல்லப்பட்டார்கள் எனவும் அவ்வாறான உடைகளை தமிழ்ப் பெண்கள் அணிவதில்லை எனவும் அதனால் அவர்கள் போராளிகள் எனவும் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார்.


கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பார்த்தால் மகிந்த எவ்வளவு பொய்யன் என்பதை புரிந்து கொள்ளமுடியும். ஒருவன் அணிந்திருக்கும் உடைகளை பற்றி கூறி அதன் மூலம் ஒரு படுகொலையை நியாயப்படுத்துகின்ற உலகின் முதலாவது பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவாகவே இருக்கமுடியும்.

தொடர்புடைய சுட்டிகள்
கண்காணிப்புக்குழுவின் அறிக்கை
அதற்கான சிங்கள அரசாங்கத்தின் விளக்கம்
செஞ்சோலை
செஞ்சோலை வளாகம். இது பல ஆண்டுகளாக தாய் தந்தைகளை இழந்த குழந்தைகளின் காப்பகமாக செயற்பட்டு வருகிறது. கடல் தாக்குதல் ஒன்றின் போது வீரச்சாவடைந்த கடற்கரும்புலி காந்தரூபன் என்பவரின் இறுதி வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டு நேரடியாக அவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் காப்பகமே அதுவாகும்.

இக்காப்பகமானது ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக இரண்டு வளாககங்களை கொண்டு இயங்கிவருகிறது. இங்கு இருக்கின்ற குழந்தைகள் போருக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற பொய்யான பிரச்சாரங்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதும், அவ் வளாகங்களுக்கு நேரடியாக சர்வதேச தொண்டு அமைப்புக்கள் சென்று, அங்குள்ள உண்மை நிலையை உணர்ந்து பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.



செஞ்சோலை வளாகத்தில் கருகிய மொட்டுக்கள். அனைவரின் முகங்களை காண படத்தின் மேல் அழுத்துங்கள்

கடந்த சமாதான காலத்தில் தாயகத்துக்கு சென்ற ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் அக் குழந்தைகள் காப்பகத்துக்கு செல்லாமல் திரும்பியிருக்க மாட்டார்கள். கடந்த சமாதான காலத்தோடு அக்குழந்தைகள் காப்பகம் கிளிநொச்சி பகுதிக்கு தனது வளாகத்தை மாற்றி கொண்டது.

இவ்வாறு செஞ்சோலை பிள்ளைகள் வாழ்ந்த அந்த முன்னைய வளாகமானது பாடசாலை மாணவர்களின் வாழ்வாதார கல்வி பட்டறைகளை நடாத்த கூடிய வசதியை கொண்டிருந்தது. மாணவர்களை(அதுவும் மாணவிகளை) இரண்டு நாள் தங்கவைத்து பட்டறைகளை நடாத்தக் கூடிய வசதிகளை கொண்ட எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் தான் வன்னி பிரதேசம் இருக்கிறது. சாதாரண பாடசாலைகளில் மாணவர்கள் தங்கி கல்வி கற்க கூடிய எந்த வசதிகளும் இல்லை. இதனால் கிளிநொச்சி மாவட்ட கல்வி திணைக்களத்தால் செஞ்சோலை வளாகம் அதற்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டது.

அவ்வளாகத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்குள் பல்வேறு தொண்டு அமைப்புக்களின் காப்பகங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகமும் உள்ளடங்கும்.

இவ்வளாகம் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டும் 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

செஞ்சோலை வளாகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் நாங்கள் திட்டமிட்டுத்தான் தாக்கினோம் என வீராப்பு பேசி நிற்கும் சிங்கள அரசின் திட்டம் என்ன? தமிழ்ச் சந்ததிகளையே அழிப்பதோடு அல்லாமல் புலிகளின் கோபத்தை சீண்டி நிற்கும் அரசுக்கு தமிழர்கள் வழங்கப்போகும் பதில் என்ன?

படங்கள்: நிதர்சனம்

தொடர்புடைய சுட்டிகள்
தென்செய்தி
புதினம்
ஈழப்போரும் ஆட்லறியும்
இன்று இலங்கைத் தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்லறி தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவ இயந்திரத்திற்கு பலத்த அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.

இன்று தமிழீழத்தின் அனைத்து பிரதேசங்களும் விடுதலைப்புலிகளின் ஆட்லறி தூரவீச்சுக்குள்ளேயே வந்துவிட்டது. இதனால் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் எத்தகைய நெருக்கடிகளை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போது விடுதலைப்புலிகளின் அதிகரித்த ஆட்லறி வலுவானது ஒரே நேரத்தில் கிழக்கே திருகோணமலைத் துறைமுகத்தையும் வடக்கே பலாலி விமான தளத்தையும் உக்கிரமாக தாக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பதும் அதன்காரணமாக சிறிலங்கா படையினரின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளன.

1990 ஆண்டில் விடுதலைப்புலிகளால் ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டபோது அதனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்பதில் சிறிலங்கா இராணுவம் போராடியது. அதற்கு பிரதான காரணம் ஆனையிறவில் அப்போது இருந்த இரண்டு ஆட்லறிகள் விடுதலைப் புலிகளுக்கு போய்விடக்கூடாது என்பதே.


அதேபோல 1995 ஆண்டில் விடுதலைப்புலிகளால் நீண்ட தூர மோட்டார் பீரங்கியால் பலாலி விமான தளம் தாக்கப்பட்ட போது சிறிலங்கா இராணுவ தலைமை நெருக்கடிக்குள்ளானது. பலாலி விமான தளத்தை எப்படியாவது விடுதலைப்புலிகளின் சூட்டு வீச்சுக்குள் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் அதேயளவு தூரத்துக்கு புலிகளை பின்னகர்த்த வேண்டும் என கருதியது. அவ்வாறு ஒரு நடவடிக்கையை செய்ததன் மூலம் பலாலி விமானதளம் தன்னை தக்கவைத்துக்கொண்டது.

ஆனால் விடுதலைப்புலிகளால் நீண்ட தூரவீச்சு ஆட்லறிகள் 1996 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்படுத்த தொடங்கியபோது சிறிலங்கா இராணுவத்துக்கு நெருக்கடி சூழ தொடங்கியது. ஆனாலும் அக்காலப் பகுதியில் பலாலி தளம் மீது ஆட்லறிகள் மூலம் முற்றுகையை ஏற்படுத்த கூடிய அளவுக்கு புலிகளின் ஆட்லறி படையணி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதனால் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது பலாலி தளத்தின் மீதான அதிகரித்த தாக்குதல்களால் படையினரின் நாளாந்த விமான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிறிலங்கா படையினரின் பிரதான விநியோக மையமாக செயற்பட்டு வந்த திருகோணமலை துறைமுகப் பகுதி முதல் தடவையாக விடுதலைப்புலிகளின் ஆட்லறி தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.


பலாலி விமான தளம் மீதான தாக்குதல்கள் புலிகளின் பூநகரி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் திருகோணமலை துறைமுகம் மீதான தாக்குதல்கள் சம்பூர் ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு கூறுகிறது.

அதேவேளை, கடல்வழியாக துருப்புக்களை ஏற்றிச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களை சிறிலங்கா இராணுவம் மறந்திருக்க மாட்டாது. 700 இற்கும் மேற்பட்ட படையினரை ஏற்றிச்சென்ற சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள் கடும்பிரயத்தனங்களின் மத்தியில் இரண்டு தடவைகள் எப்படியோ தப்பியிருக்கிறது.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கான உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லுகின்ற கப்பல் ஒன்று விடுதலைப்புலிகளின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.


தரைவழி தொடர்புகள் எதுவுமின்றி, யாழ்ப்பாணத்தில் 40000 படையினரை நிலைநிறுத்தியவாறு கடல் மற்றும் வான் வழி போக்குவரத்துக்கள் கேள்விக்குள்ளான நிலையில் தமது படைநிலைகளை பேணுவது என்பது இலகுவானதல்ல.

தற்போது சிறிலங்கா படைதரப்புக்கு பலாலி விமானதளத்தை மட்டும் அல்ல திருகோணமலை துறைமுகத்தையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆனால் விடுதலைப்புலிகளும் நீண்ட கால போரிற்கு தயாராகி விட்டது போலவே களநிலைமைகள் காணப்படுவதால், அதற்கான சாத்தியங்களை இனிமேல் எதிர்பார்க்கமுடியாது.


அத்தோடு தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் கவனித்தால் எப்போதுமே அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆபத்தான நிலையே காணப்படுகிறது. கிளைமோர் தாக்குதலும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடுகளும் படையினருக்கு எப்போதும் இல்லாத அழிவையே கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலைகளின் பின்னனியில், சிறிலங்கா அரசானது தனது படைவலு எதிர்நோக்கியுள்ள அபாயத்தை உணர தொடங்கியிருக்கலாம். அதன்காரணமாக சிறிலங்கா இராணுவத்தினர் தாமாகவே யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

படங்கள்: தமிழ்நாதம்