|
இளமையில் வெறுமை
|

துப்பாக்கி போட்ட துவாரங்களுக்குள்ளால் தூரத்தே ஏதேனும் வெளிச்சம் தெரிகிறதா? துடிப்பான சிறுவன் இவன் தொய்ந்துபோய் பார்க்கின்றான்.
கொடுமை கொடுமை இளமையில வறுமை அதனிலும் கொடுமை இளமையில் வெறுமை.
|
|
|
அன்பின் நண்பா?
|
அன்பின் நண்பா?
பல நாள் இடைவெளிகளின் பின்தான் உனக்கு கடிதம் எழுத நேரம் கிடைத்தது. நீ நலமாகத்தான் இருப்பாய் என நம்பினாலும் நீ எப்படி சுகமாக இருக்கிறாயா? நாங்கள் எப்படியோ இப்போதைக்கு நலமாகவே இருக்கிறோம்.
மேலும், நாட்டுநிலைமைகள் அவ்வளவு நல்லாயில்லை. அடிக்கடி அமைதித்தூதுவர்கள் வந்துபோனாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். சமஸ்டி என்றும் இடைக்கால நிர்வாகம் என்றும் இழுபட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பென வந்து இருக்கிறது. சந்திரிகா தான் எப்படியும் புலிகளோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டுசெல்வார் என வானோலிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றன. நல்லூர் திருவிழாவில் சந்திரிகா சீப்பு என்றும் சந்திரிகா சாறி என்றும் பொருட்களை விற்ற தமிழர்கள் சந்திரிகாவை எவ்வளவு தூரம் நம்பியிருந்திருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட சந்திரிகாவால்தான் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோம். எல்லாமே ஒருநாடகம் தான் காட்சிகள் தான் இடையிடையே மாறுகின்றன.
மேலும் நேற்று தொழிநுட்ப கண்காட்சி ஒன்றுக்கு போயிருந்தேன். இது கிளிநொச்சியில் வன்னிரெக் தொழிநுட்ப நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. எனக்கு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நாங்கள் நடாத்திய விஞ்ஞான கண்காட்சி ஞாபகங்கள்தான் வந்தன. ஏராளமாக மாணவர்கள் வந்திருந்தார்கள். சைக்கிள் சுற்றி வானொலிச் செய்திகள் கேட்ட மாணவர்கள் , ஜாம் போத்தல் விளக்குக்குக்காவது மண்ணெண்ணை கிடைக்காதா ஏங்கியிருந்த அந்த சிறுவர்கள், கண்காட்சியில் வைத்திருந்த கம்பியுட்டர் தொழிநுட்பங்களை பார்த்து பிரமித்து போனார்கள்.
போரினால் அழிந்துபோனாலும், இந்த மண் மீண்டும் நிமிர்ந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். கிளிநொச்சியை மையப்படுத்தி பல்வேறு கட்டுமானங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெரியளவான வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. உலக வரலாற்றில் போர்கள்தான் நகரங்களின் இடஅமைவை தீர்மானிக்கின்றன. அந்தவகையில் தமிழீழப்போரே வன்னிமையத்தை நிமிரச்செய்துள்ளது. இது எப்போதும் தொடரவேண்டும் என்றே நினைக்கிறேன்.
மேலும் நீ வேறுபல விடயங்களையும் கேட்டிருந்தாய். அதுபற்றியும் எழுதுகிறேன். உங்கு என்ன புதினங்கள் என்பதையும் எழுதவும்.
அன்புடன் தமிழ்வாணனின் நண்பன்.
|
|
|
அம்மாவென்று அழைக்காத......
|
இது ஓர் அம்மாவைப் பற்றி சொல்லும் பாடல்: சிறிது நேரத்தில் பாடல் ஆரம்பமாகும். அப்படியில்லாவிட்டால் கீழுள்ள முகவரியில் சென்றும் தரவிறக்கிகொள்ளலாம். |
|
|
|