<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9107255?origin\x3dhttp://thamilsangamam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
  திங்கட்கிழமை, ஏப்ரல் 7, 2025. திருவள்ளுவராண்டு 2056.  
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்
Statcounter
To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அல்லைப்பிட்டி
இது
புத்தர்பெருமான் ஞானம்பெற்ற
சித்திரை நாளின் சிறப்புப் பரிசு.
பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு
பௌத்ததேசம் வழங்கிய விருது.
அன்று
விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன
எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன.

பாருங்கள்
எல்லோரும் உற்றுப் பாருங்கள்.
ஈரம் நொதிக்கும் இதயங்களே!
தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே!
எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்துகொள்ளுங்கள்.
ஏதும் அறியாமல்,
ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்
குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்பவிருட்சம்.



பிஞ்சை அணைத்தபடி பூவும்,
பூவைப் பிணைந்தபடி காயும்
தமிழருக்குக் காவலென்பதால் நாயும்
எரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா?

உலகமே!
இதற்கும் உன் மௌனம்தான் பதிலா?

மரங்களைத் தறியாதீர் என்பவர்களே!
இங்கு மனிதர்களைச் சரிக்கிறார்களே.
மிருகங்களை வதையாதீர் என்பவர்களே!
இங்கு பிள்ளைகளைக் கொல்கிறார்களே.
ஏன் கேள்வி எழுப்பவில்லை?
எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை?
ஈழத்தமிழர் சாகப் பிறந்தவர்களா?
நாயைப்போல வாழப் பிறந்தவர்களா?

இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக்குரல்.

உலகமே!
எமக்குப் பதில்வேண்டும்
இப்போது வாருங்கள்
இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம்
எதற்காகவும் வரவேண்டாம்.
முடியுமெனில்
உங்கள் விழியில் எங்களை எடுங்கள்.
இல்லையெனில்
எங்கள் வழியில் எங்களை விடுங்கள்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை
நன்றி சூரியன்
இலங்கையின் இறைமை
நேற்றையதினம் தமிழீழக் கடற்பரப்பில் பெருமெடுப்பிலான கடற்சண்டை இடம்பெற்றிருக்கிறது. சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பாக சென்ற கடற்கலங்கள் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. சுமார் 700 இராணுவத்தினரை சுமந்து சென்ற கப்பல் தாக்குதலிலிருந்து தப்பியிருக்கிறது. ஆனாலும் இரண்டு சிறிலங்கா டோரா படகுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த இருபதுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting
இதுவரை காலமும் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையா? இது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

சுமார் இருபதுக்கு மேற்பட்ட சண்டைப்படகுகளில் வந்த கடற்புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். திருகோணமலையில் சிறிலங்கா படைகளால் விமான தாக்குதல் நடாத்தப்பட்டபோது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை எனவும் - இருபதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தபோதும் – பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும், இவ்வாறான தாக்குதல்களின்போது இவ்வாறான உயிரிழப்புக்கள் இயல்பானதுதான் எனவும் வக்காலத்து வாங்கிய கண்காணிப்புக்குழு என்ன சொல்கிறது?

விடுதலைப்புலிகள் கடலில் செயற்படுவதற்கான உரிமை இல்லை எனவும் அவ்வாறான முழு உரிமையும் சிறிலங்கா அரசுக்கே உள்ளதெனவும் கூறியுள்ளது. ஆனால் நேற்றுக்கடலில் நடந்த கதை என்னவென்பதை தூரநோக்குடன் சிந்தித்தால் சமாதான வழியில் தீர்வு காணலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.



நேற்றைய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட படகுகளில் ஒன்று


விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக 700 படையினரை கொண்ட துருப்புக்காவி இந்திய கடற்பகுதிக்குள் சென்றதை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார். விடுதலைப்புலிகள் கடலில் பயணம் செய்யமுடியாது என சொல்லும் சிறிலங்கா படைகள் அதே கடலில் அவர்களுடைய தாக்குதலில் இருந்து தப்பியோடி இந்திய கடலுக்கு சென்று மீண்டும் இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்திருக்கிறது.

இந்தியக்கடல் எல்லைக்குள் நின்றுகொண்டு தமதுநாட்டின் இறைமை என்றும் தமது கடல் என்றும் இப்போதும் அலட்டுவதற்கு தயாராக சிங்களம் இருக்கிறது.